தற்போது தமிழகத்தில் டிஎன்பிஎல் டி20 லீக் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் இன்று சேலம் மைதானத்தில் சேலம் ஸ்பார்ட்டான்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் இளம் வீரர்கள் அனுபவ வீரர்களான திண்டுக்கல்லின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தியை கட்டுப்படுத்தி வென்றார்கள்.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் பாபா இந்த ரஞ்சித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் துவக்க வீரராக வந்த அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 பந்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் சிவம் சிங் 12 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதே சமயத்தில் மிடில் வரிசையில் விமல் குமார் 32 பந்துகளில் 47 ரன்கள், 34 பந்தில் 51 ரன்கள், தினேஷ் ராஜ் 10 பந்தில் 20 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. சேலம் ஸ்பார்ட்டான்ஸ் அணிதரப்பில் சன்னி சந்து மற்றும் ஹரிஷ் குமார் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சேலம் ஸ்பார்ட்டான்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கவின் 36 பந்தில் 48 ரன்கள், ராஜேந்திர விவேக் 28 பந்தில் 51* ரன்கள், அபிஷேக் 26 பந்தில் 28 ரன்கள் எடுக்க, அந்த அணி வெகு எளிதாக 18.1 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்கள் பந்துவீசி விக்கெட் கைப்பற்றாமல் 24 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஐபிஎல் அளவில் புகழ்பெற்ற வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் தந்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்ட காப்பாத்த.. இந்த நாடுகளை விளையாட வைக்காதிங்க – ரவி சாஸ்திரி கருத்து
இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்ட்டான்ஸ் இளம் வீரர்கள் அனுபவ பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரிடம் அதிரடி காட்டாமல் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்கின்ற அளவில் புத்திசாலித்தனமாக எடுத்துக் கொண்டு, மற்ற பந்துவீச்சாளர்களை அடித்து சுலபமாக வெற்றி பெற்றார்கள். இப்படி அவர்கள் மூளையை பயன்படுத்தி விளையாடியதால் ரவிச்சந்திரன் அஸ்வினாலே கூட அவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






