தற்போது இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பார்டர் தவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் எப்பொழுது சேர்க்கப்படுவார்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஒரு வருடமாக கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வில் இருந்து இந்திய அணிக்கு விளையாட முடியாமல் இருந்து வருகிறார்.
தாமதமாகும் செலக்சன்
இந்த நிலையில் முகமது ஷமி முழு உடல் தகுதி பெற்று உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியில் தனது மாநில அணியான பெங்கால் அணிக்கு விளையாடிவிட்டார். ஆனால் அவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை.
இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது ஷமியை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரில் விளையாட வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அவரை தேர்வு செய்யாமல் இருந்து வருவதற்கான காரணம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
வெளியான உண்மை காரணம்
இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் விளையாட்டு அறிவியல் பிரிவு முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ஆஸ்திரேலியா அனுப்ப முன் வரும் என செய்திகள் தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகவும் கண்டிப்பாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 90 ரன்.. கலக்கிய ஆர்சிபி வீரர்.. சுருண்ட தமிழ்நாடு அணி.. கர்நாடகா வெற்றி.. நாக் அவுட் வாய்ப்பு முடிந்ததா?
எந்த ஒரு வீரரையும் அரைகுறை உடல் தகுதியுடன் அனுப்பி மேலும் காயத்தை அதிகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பாதது தெளிவாகத் தெரிகிறது. மேலும் முகமது ஷமியும் தான் நூறு சதவீத உடல் தகுதி பெறவில்லை என்றால் நிச்சயம் இந்திய அணிக்கு விளையாட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். தற்பொழுது இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிவியல் விளையாட்டு பிரிவின் அனுமதிக்காக காத்திருக்கிறது!






