90 ரன்.. கலக்கிய ஆர்சிபி வீரர்.. சுருண்ட தமிழ்நாடு அணி.. கர்நாடகா வெற்றி.. நாக் அவுட் வாய்ப்பு முடிந்ததா?

0
264
SMAT

தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் தமிழக அணி கர்நாடகா அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்து இருக்கிறது.

இந்திய உள்நாட்டு பெரிய டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடர் மொத்தம் 32 அணிகளை நான்கு பிரிவுகளாக பிரித்து, ஒரு பிரிவுக்கு எட்டு அணிகள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்து கால் இறுதிக்கு முன்பான நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

- Advertisement -

டாஸ் வென்று போட்டியை தோற்ற தமிழ்நாடு

தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையே இந்த ஊரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் ஷாருக் கான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தமிழ்நாடு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபா இந்திரஜித் 5, நாராயணன் ஜெகதீசன் 0 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து பூபதி குமார் 1, கேப்டன் ஷாருக் கான் 19, விஜய் சங்கர் 0, சாய் கிஷோர் 2 ரன்கள் என முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினார்கள். இதனால் இந்திய அணி வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. நடந்து முடிந்த மெகா ஏலத்தில் ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் மனோஜ் பாண்டேக் மற்றும் கௌஷிக் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

மணிஷ் பாண்டே மற்றும் மயங்க் அகர்வால்

இதைத்தொடர்ந்து கர்நாடக அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மனிஷ் பாண்டே 29பந்தில் 42 ரன்கள், மயங்க் அகர்வால் 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தார்கள். இதன் காரணமாக 11.3 ஓவரில் கர்நாடக அணி மூன்று விக்கெட் மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது இந்திய அணி மொத்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் விளையாடி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வென்று 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது.இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதம் இருக்கிறது. அதே சமயத்தில் முதல் இடத்தில் இருக்கும் பரோடா நான்கு போட்டிகளில் நான்கையும் வென்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதோடு அடுத்த சுற்றையும் உறுதி செய்து விட்டது.

இதையும் படிங்க : பும்ரா ஒரு ஜோக்.. வேற என்ன சொல்ல.. நான் இதை செய்ய வேண்டியது இல்லை – ஸ்டீவன் ஃபின் பேட்டி

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கர்நாடகா 5 போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று 12 புள்ளிகள் உடனும், சௌராஷ்டிரா மற்றும் குஜராத் அணிகள் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று தலா 12 புள்ளிகள் உடனும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கிறார்கள். எனவே தமிழக அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டதாகவே தெரிகிறது.

- Advertisement -