ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக ஐபிஎல் 2021 தொடரில் ஆட வாய்ப்புள்ள 5 வீரர்கள்

0
1105
Jofra Archer and Dushmantha Chameera

மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸ் நாட்டில் பிறந்த வீரர் ஜோப்ரா ஆர்ச்சர். மூன்று முறை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆடி இருந்தாலும் அவரது ஆசை இங்கிலாந்து அணிக்கு ஆட வேண்டும் என்பதுதான். காரணம் அவரது தந்தை இங்கிலாந்து குடிமகன். இதன் மூலம் அவரால் இங்கிலாந்திற்கு ஆட முடியும். ஆர்ச்சரின் திறமையைப் பார்த்த இங்கிலாந்து நிர்வாகம் அவரை தங்களது அணிக்குள் சேர்த்துக்கொண்டது.

உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் முதல் முறையாக இங்கிலாந்து அணிக்காக களம் இறங்கினார். அதன் பின்பு உலக கோப்பை தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். பரபரப்பான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரை வீசியது ஆர்ச்சர் தான்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளிலும் தான் விளையாடிய முதல் தொடரிலேயே உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்தை பவுன்சர் மூலம் தாக்கி நிலைகுலையச் செய்தார். பலர் அஞ்சும் வீரராக உருவெடுத்து வந்த ஆர்ச்சர் காயத்தினால் தற்போது அவதிப்பட்டு வருகிறார். காயத்தின் வீரியம் அதிகமாக இருக்க இந்த ஆண்டு முழுவதும் அவரால் எந்த வகையான கிடைக்கட்டும் ஆட முடியாது என்று கூறிவிட்டது இங்கிலாந்து நிர்வாகம்.

ஆர்ச்சரின் காயத்தினால் பெருகும் பாதிக்கப்படப்போவது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தான். காரணம் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர் நாயகன் இவர்தான். ஏற்கனவே பல வெளிநாட்டு வீரர்களை இழந்துள்ள இந்த அணி தற்போது ஆர்ச்சரையும் இழந்துள்ளது. அதற்கு பதிலாக வேறு சில வேகப்பந்து வீச்சாளர்களை ராஜஸ்தான் அணி முயற்சிக்கலாம். அப்படி ராஜஸ்தான் அணிக்கு தகுதி வாய்ந்த ஐந்து நபர்கள் இதோ

1. ஜேம்ஸ் பால்க்னர்

2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார் பால்க்னர். அந்த தொடரில் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் பின்வரும் காலங்களில் அவரால் சிறப்பாக பங்களிக்க முடியவில்லை. 2016ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக ஆடிய பின்பு அவரை எந்த நிர்வாகமும் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. தற்போது 2021 பி எஸ் எல் தொடரில் பங்கேற்ற இவர் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங் பவுலிங் என்று இரண்டிலும் அசத்திய இவரை மீண்டும் ஒருமுறை ராஜஸ்தான் அணி முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -

2. துஷ்மந்த சமீரா

ஒரு காலத்தில் இவர் ராஜஸ்தான் அணியின் தான் இருந்தார். ஆனால் இவரால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை. தற்போது இலங்கை அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் சில பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். இதனால் மீண்டும் இவரை ராஜஸ்தான் அணி நிர்வாகம் முயற்சி செய்து பார்க்கலாம். இங்கிலாந்து நாட்டிலேயே மிகவும் சிறப்பாக பந்து வீசி அசத்திய துஷ்மந்த் சமீரா விரைவில் ஐபிஎல் தொடரிலும் ஆடலாம்.

3. டேவிட் வில்லி

இங்கிலாந்து அணி வீரர்கள் மீது பெருத்த நம்பிக்கை வைத்திருக்கிறது ராஜஸ்தான் அணி. பட்லர் ஸ்டோக்ஸ் லிவிங்ஸ்டன் என்று பல இங்கிலாந்து பெயர்களை தங்கள் அணிக்குள் வைத்துள்ளது. இதேபோல ஆர்ச்சருக்கு பதிலாக இவர்களால் இன்னொரு இங்கிலாந்து வீரரையும் வாங்க முடியும். இங்கிலாந்து அணிக்காக t20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் டேவிட் வில்லியை இவர்கள் தங்கள் அணிக்குள் எடுத்துக்கொள்ளலாம். பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வரும் இவர் பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடக்கூடியவர். மற்றும் ஒரு ஆல்ரவுண்டரை ராஜஸ்தான் அணி வில்லி மூலம் முயற்சி செய்து பார்க்கலாம்.

4. டிம் சவுதி

இவரும் ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு ஆடிய வீரர்தான். நியூசிலாந்து அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர் சவுதி. மேலும் அமீரக மைதானங்களை இவர் நன்கு அறிந்து வைத்திருப்பதால் இவருடைய அனுபவம் இந்த அணிக்கு பெரிதும் கை கொடுக்கலாம். தற்போது ஐசிசி தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் சவுதி, ராஜஸ்தான் அணிக்கு கிடைத்தால் அவரது அனுபவம் அந்த அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5. டேவிட் வீஸ்

தென் ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்த மிக பிரமாதமான ஆல்ரவுண்டர் டேவிட் வீஸ். பாகிஸ்தான் சூப்பர் லீக் t20 பிளாஸ்ட் என்று பல டி20 தொடர்களில் பங்கேற்று வரும் இவர், தான் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் மிகச்சிறந்த வெற்றி வீரராக வலம் வருகிறார், பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என்று 3 துறைகளிலும் அசத்தி வரும் இவரை ராஜஸ்தான் அணி தங்கள் அணிக்குள் எடுத்துக்கொள்ளலாம்.

கடைசியாக 2012ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய இவரை அதன்பிறகு எந்த அணியும் இவர் மேல் நம்பிக்கை வைக்காததால் ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. ராஜஸ்தான் அணியில் ஏற்பட்டிருக்கும் இந்த வெற்றிடத்தை இவர் நிரப்பக் கூடும்.