பொதுவாக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளின் பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சை மிகவும் திறமையாக விளையாட கூடியவர்கள். ஆரம்பத்தில் இங்கு பெரிதாக வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாகாத காரணத்தினால், இளம் வயதில் இருந்து சுழற் பந்துவீச்சை விளையாடி, அதைச் சிறப்பாக சமாளிப்பதற்கான திறமையை இயல்பாக பெற்று இருப்பார்கள்.
பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்களை எவ்வளவு உருவாக்கினாலும் கூட, அவர்களிடமும் முஸ்டாக் அகமது, சக்லைன் முஸ்டாக் என்று பெரிய மாஸ்டர் ஸ்பின்னர்கள் இருந்தார்கள். பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களும் மிகச்சிறப்பாக சுழற் பந்துவீச்சை விளையாடுவார்கள்.
ஆனால் சமீப காலமாக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவதில் மிகவும் தடுமாற்றத்தை வெளிப்படுத்திவருகிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்தியாவில் தொடர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருவதால், இப்படியான நிலைமை என்று கூறப்படுகிறது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு முடிவுகளை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தினால் ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக அமைக்கப்படுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நிச்சயமாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு புதிய சுழல் பந்துவீச்சாளர்கள் பிரச்சினையாக இருக்கிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. முரளிதரன் வார்னே போன்ற ஸ்பின்னர்களை சாதாரணமாக விளையாடி, புதிதாக வரும் ஸ்பின்னர்களுக்கு விக்கெட்டை கொடுக்கிறார்கள்.
இதற்கு முந்தைய ஆஸ்திரேலிய தொடரில் ஆடுகளங்கள் மோசமாக அமைக்கப்பட்ட காரணத்தினால் இந்திய பேட்ஸ்மேன்களால் சரியாக விளையாட முடியவில்லை. தற்போது இந்திய அணியில் அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்கள் இருப்பதால் சரியாக விளையாட முடியவில்லை.
தற்போது இந்திய கிரிக்கெட் சம்பள பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஏ கிரேடு கொடுக்கப்பட்டு இருக்கிறது, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாத ஹர்திக் பாண்டியாவுக்கும் ஏ கிரேடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : ரஞ்சி செமி.. ரகானே ஸ்ரேயாசை கட்டம் கட்டி தூக்கிய தமிழ்நாடு அணி.. சாய் கிஷோர் கலக்கல் பவுலிங்
நாளை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினால், அவர்களுக்கு ஏ ப்ளஸ் கிரேடு கொடுத்தால் அது தவறானதாக இருக்குமா? என்று தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்