“கடையில கிடைச்சா நம்பிக்கைய எவ்வளவு விலை குடுத்தும் வாங்க தயார்!” – இங்கிலாந்து கிறிஸ் வோக்ஸ் வேதனையான பேச்சு!

0
5971
Woakes

நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு நடப்பு உலக கோப்பை தொடர் மிகவும் சோதனையான களமாக இருந்து வருகிறது. விளையாடி உள்ள ஆறு போட்டிகளில் தற்பொழுது 5 போட்டிகளை தோற்று இருக்கிறது.

நடப்பு சாம்பியனாக உலகக்கோப்பை தொடருக்குள் வந்து அதிக தோல்விகளை சந்தித்த ஒரு அணியாக உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனைக்கு இங்கிலாந்து அணி சொந்தக்காரராக இருக்கிறது.

- Advertisement -

வெள்ளைப் பந்தின் இரண்டு கிரிக்கெட் வடிவத்திலும் தற்பொழுது உலக சாம்பியனாக கோலோச்சும் இங்கிலாந்து அணிக்கு இப்படி ஒரு சரிவு இந்த உலகக் கோப்பையில் உருவாகும் என்று யார் சொல்லி இருந்தாலும் நம்பி இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மோசமான சரிவை சந்தித்து இருக்கிறது இங்கிலாந்து!

இங்கிலாந்து அணியின் பௌலிங் யூனிட் பலவீனமாக இருப்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும், இங்கிலாந்து அணியின் பேட்டிங் யூனிட் இவ்வளவு மோசமாக செயல்படுவது யாரும் எதிர்பாராத ஒன்று. அவர்களுக்கு எந்த மாதிரி ஆடுகளங்கள் கிடைத்தாலும், எவ்வளவு சிறிய இலக்கு கிடைத்தாலும், அவர்களால் வெற்றிகரமாக எல்லையை தொட முடிவதில்லை.

பேட்டிங் செய்ய சாதகமான சிறிய மைதானமான டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், இதே சூழ்நிலையை கொண்ட பெங்களூர் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து தோல்வி அடைந்தது, அவர்களுடைய பேட்டிங் காரணமாகத்தான். அந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து பந்துவீச்சு சரியான அளவிலேயே இருந்தது.

- Advertisement -

நேற்று இந்திய அணிக்கு எதிராக 230 ரண்களை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, மிக மோசமாக பேட்டிங்கில் சொதப்பி 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி இங்கிலாந்து அணியின் மேல் இருந்த சிறுநம்பிக்கையையும் துடைத்து விட்டது.

இந்த நிலையில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் பேசும்பொழுது “நம்முடைய நம்பிக்கையை ஒரு நிமிடத்தில் எங்காவது வாங்க முடிவதாக இருந்தால், எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்கலாம். நம்பிக்கையை பாட்டிலுக்குள் அடைத்துக் கொண்டு வர முடியாது. நம்பிக்கை இல்லாத பொழுது நீங்கள் சில மோசமான ஷாட் விளையாடுவீர்கள், சில மோசமான முடிவுகளை எடுப்பீர்கள்.

எங்கள் தோல்விகள் குறித்து பின்னோக்கிப் பார்ப்பது எளிது. நாங்கள் இன்னும் கொஞ்சம் விவேகத்துடன் செயல்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுவதும் எளிது. நாங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு, இன்னும் சில பாட்னர்ஷிப்புகளை நேற்று பெற்று இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!