ஆர்சிபிக்கு ஆதரவாக அம்பயர்.. கண் முன் நடந்த ஏமாற்றம்.. சங்கக்கரா கொதிப்பு.. ரசிகர்கள் கோபம்

0
371
Dinesh

நடப்பு ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் நடுவர் தவறான தீர்ப்பை கொடுக்க தினேஷ் கார்த்திக் அவுட் வாய்ப்பிலிருந்து தப்பி இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். ஆர்சிபி அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாப் டு பிளேசிஸ் 14 பந்தில் 17 ரன்கள், விராட் கோலி 24 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து கேமரூன் கிரீன் 21 பந்தில் 27 ரன்கள், ரஜத் பட்டிதார் 22 பந்தில் 34 ரன்கள், கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் என அடுத்தடுத்து வெளியேற ஆர்சிபி அணி பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்தார்.

அப்பொழுது பந்துவீச்சுக்கு வந்த ஆவேஸ் கானின் பந்துவீச்சில் முதல் பந்தையே காலில் வாங்கினார். ராஜஸ்தான் அவுட் அப்பீல் செய்ய களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்தார். தினேஷ் கார்த்திக் மூன்றாவது நடுவரிடம் செல்ல, மூன்றாவது நடுவர் மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு அவுட் இல்லை என தீர்ப்பு கொடுத்தார்.

தினேஷ் கார்த்திக் பந்தை பேட்டில் தடுக்க முயற்சி செய்த பொழுது, பந்து கால் பேடில் பட்டது. இந்த நேரத்தில் ஸ்னிக்கோ மீட்டரில் அதிர்வு காணப்பட்டது. இது மைதானத்தில் இருந்த அனைவருக்கும் நன்றாகவே தெரிந்தது. ஆனால் அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்றார். வெளியில் இருந்த ராஜஸ்தான் பயிற்சியாளர் சங்கக்கரா கொதித்துப் போய் நியாயம் கேட்க சென்று திரும்பி வந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் கடுமையாக கோபமடைந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு மாஸ்டர் பிளான்.. அஸ்வின் ஆர்சிபிக்கு வைத்த 2 செக்.. களத்தில் நடந்த செம சம்பவம்

இந்த நிலையில் அவுட்டு ஐபிஎல் தப்பிய தினேஷ் கார்த்திக் மேற்கொண்டு நிலைக்காமல் 13 பந்தில் 11 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து இருக்கிறது.