ஒரு மாஸ்டர் பிளான்.. அஸ்வின் ஆர்சிபிக்கு வைத்த 2 செக்.. களத்தில் நடந்த செம சம்பவம்

0
256
Ashwin

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் தமிழக சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான திட்டத்துடன் ஆர்சிபி அணியை மடக்கி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆர் சி பி அணிக்கு வழக்கம் போல் விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளேசிஸ் இருவரும் களமிறங்கினார்கள். ராஜஸ்தான் பந்து வீச்சை டிரண்ட் போல்ட் ஆரம்பித்தார்.

- Advertisement -

முதல் ஓவரில் இருந்து அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக சந்திப் ஷர்மா மற்றும் ஆவேஸ் கான் இருவர் பந்துவீச்சையும் ஆர்சிபி துவக்க ஆட்டக்காரர்கள் அடித்து விளையாட ஆரம்பித்தார்கள். சஞ்சு சாம்சன் புத்திசாலித்தனமாக டிரெண்ட் போல்டை பவர் பிளேவில் மூன்றாவது ஓவருக்கு கொண்டு வந்தார்.

இந்த நிலையில் களத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், மிட் விக்கெட் திசையில் நிற்கவைக்கப்பட்டிருந்த ரோமன் பவலிடம் கேட்ச் வரப்போகிறது என்று கூறி அவரை எச்சரிக்கை செய்தார். அவர் சொன்ன அடுத்த பந்து பாப் டு பிளேசிஸ் ரோமன் பவலிடம் பந்தை அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சுக்கு வந்தார். அவர் தொடர்ந்து ஆர்சிபி வலது கை பேட்ஸ்மேன்களை லெக் சைடு மட்டுமே அடிக்க வைக்கும் விதமாக பந்தை அவர்களது உடம்புக்குள் மட்டுமே வீசினார். குறிப்பாக ரஜத் பட்டிதாருக்கு இதையே தொடர்ந்து செய்தார். ரன் அழுத்தம் அதிகமான ரஜத் பட்டிதார் அஸ்வின் பந்தை அடித்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை துருவ் ஜுரல் வீணடித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் வீக்னஸ கண்டுபிடிச்சிட்டாங்க.. அவர் பெரிய தப்பு பண்றாரு இனி கஷ்டம் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

ஆனாலும் மனம் தளராத ரவிச்சந்திரன் அஸ்வின் திட்டத்திலிருந்து மாறாமல் தொடர்ந்து ஒரே முறையில் பந்து வீசி கேமரூன் கிரீன் விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்த பந்தில் மேக்ஸ் வெள்ளை கோல்டன் டக் செய்து வெளியேற்றினார். இன்று நான்கு ஓவரில் 19 ரன் மட்டும் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டை கைப்பற்றி ஆர்சிபி அணியை அடக்கி இருக்கிறார் அஸ்வின்!