ஆர்சிபி பாட் கம்மின்சை பார்த்து கத்துக்கனும்.. ஆனா விராட் கோலிய விட்ருங்க – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

0
74
Virat

இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஹைதராபாத் அணியின் சொந்த மைதானத்தில் நடக்க இருக்கிறது. அதிரடியான பேட்டிங் திட்டத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் அணிக்கு எதிராக, ஆர்சிபி என்ன செய்ய வேண்டும் என நவ்ஜோத் சிங் சித்து பேசியிருக்கிறார்.

இந்த முறை நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஹைதராபாத் அணி 20.50 கோடி ரூபாய்க்கு எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்சை வாங்கியது. அவரை அணிக்குள் கொண்டு வந்தால், யான்சன், ஹசரங்கா மற்றும் கிளன் பிலிப்ஸ் போன்ற எந்த வெளிநாட்டு வீரர்களையும் விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில்தான் அவரை வாங்கியதோடு ஹைதராபாத் அணி நிர்வாகம் கேப்டன் ஆகவும் மாற்றியது. கேப்டன் என்கிற காரணத்தினால் அவர் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்கின்ற சூழ்நிலையும் உருவானது. இதனை ஒட்டி அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் பல ஹைதராபாத் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

இதன் காரணமாக ஹைதராபாத் அணியின் மீது ஆரம்பத்தில் நிறைய விமர்சனங்கள் இருந்தன. மேலும் அந்த அணி தோல்வியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்தது. இப்படியான நிலையில்தான் கேப்டன் பாட் கம்மின்ஸ் அணியின் தொடக்க வீரர்களை மாற்றி, பந்து வீச்சு வரிசையில் சில மாற்றங்களை கொண்டு வந்து, தற்போது ஹைதராபாத் அணியை ப்ளே ஆப் சுற்றுக்கான அதிகபட்ச வாய்ப்பில் நிலை நிறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறும்பொழுது “நாம் மீண்டும் விராட் கோலியின் மீதே கவனம் செலுத்துவோம். ஆனால் அப்படி செய்வதை விட்டு விட வேண்டும். ஏனென்றால் இங்கு இன்னொரு அணி போட்டியிடுகிறது. கம்மின்ஸ் அவர்களது அணியை எப்படி மாற்றினார் என்று பேச வேண்டும். மயங்க் அகர்வால் தொடக்க வீரராக இருந்த இடத்தில், ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவை கம்மின்ஸ் கொண்டு வந்தார். அவரது இந்த முடிவுகள் மிகவும் பரபரப்பானவை.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் சிக்ஸர் அடிச்சதை விட.. இத செஞ்சதுதான் குஜராத் தோல்விக்கு காரணம் – சாய் கிஷோர் பேட்டி

மேலும் பந்துவீச்சில் தன்னை மிடில் ஓவர்களில் வைத்துக்கொண்டு நடராஜனை இறுதிக் கட்ட ஓவர்களுக்கு பயன்படுத்துகிறார். கம்மின்ஸ் வந்த பொழுது அணி கொஞ்சம் டவுனாக இருந்தது. அவர் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டார். தற்பொழுது அந்த அணி டாப் யூனிட் ஆக மாறி இருக்கிறது. ஆர்சிபி அணி கம்மின்சையும் அவரது பாணியையும் பின்பற்ற வேண்டும். அவர்கள் கேப்டன்சி தொடர்பாக கம்மின்ஸ் இடம் இருந்து பாடம் கற்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.