ஈ சாலா பிளே ஆப் கிட்டுமா …..172 ரண்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த பெங்களூர் …. பாப் மற்றும் மேக்ஸ்வெல் அபாரம் !

0
137

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் அறுபதாவது போட்டியில் இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின . இந்தப் போட்டி ராஜஸ்தான் மாநிலம் சவாய் மான்சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறுகிறது .

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டுப்ளசிஸ் இருவரும் களமிறங்கினர் . நிதானமான ஆட்டத்தை கடைபிடித்த இருவரும் நிலையாக ரன்களை சேர்த்தனர் .

- Advertisement -

அணியின் ஸ்கோர் ஐம்பதை தொட்ட போது ஆசிப் வீசிய பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார் . அவருக்கு இணையாக அதிரடியில் களமிறங்கிய கேப்டன் பாப்  டுப்ளசிஸ் தனது மற்றும் ஒரு அரை சதத்தை இந்த தொடரில் நிறைவு செய்தார் . இதன் மூலம் இந்தத் தொடரில் 600 ரண்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார் அவர் .

55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆசிப் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . இவரைத் தொடர்ந்து ஆட வந்த லோம் ரோடு மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டது பெங்களூர் . இதனைத் தொடர்ந்து அரை சதத்தை கடந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் 54 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார் . அவர் 33 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்திருந்து நிலையில் ஆட்டம் இழந்தார் .

இதனைத் தொடர்ந்து இறுதியில் ஆட வந்த பிரேஸ்வெல் மற்றும் அனுஜ் ராவத் இருவரும் அதிரடியாக ஆட பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவில் 171 ரண்களுக்கு ஐந்து விக்கெட் களை இழந்திருந்தது . இறுதி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உதவியுடன் 170 ரகளை கடக்க உதவினார் அனுஜ் ராவத் . இவர் 11 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளை அடித்து 29 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார் .

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஏ எம் ஆசிப் இரண்டு விக்கெட்டுகளையும் ஆடம் ஜம்பா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் . வேகப்பந்துவீச்சாளர் சந்திப்பு சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் . ஒரு கட்டத்தில் 180 ரன்கள் எடுக்கும் நிலையில் இருந்தது பெங்களூர் அணி . இறுதியில் ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .

இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதால் இரண்டு அணிகளுமே வெற்றிக்காக முயற்சியை எடுக்கும் .