3 சிக்சர், 5 பவுண்டரி.. 22 பந்துகளில் அரைசதம்.. ஆர்சிபி வீரரின் ஆட்டத்தால் மிரண்டுபோன ரசிகர்கள்

0
310

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 8 ஆண்டுகளாக விளையாடி வந்தார். சின்னசாமி மைதானத்திலேயே சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர். மிடில் ஓவர்கள் என்றாலே விராட் கோலி பந்தை சாஹலிடம் கொடுத்திவிடுவார். அவரும் விராட் கோலியின் நம்பிக்கையை காப்பாற்றியே வந்தார்.

ஆனால் திடீரென ஸ்பின்னர்களிடம் பேட்டிங் செய்யும் திறமையை ஆர்சிபி நிர்வாகம் எதிர்பார்க்க தொடங்கியது. இதனால் நட்சத்திர வீரரான சாஹலை ஏலத்தில்  விட்டுவிட்டு அவரைவிடவும் நல்ல பேட்டிங் திறமையுள்ள சுழற்பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்காவை 10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

- Advertisement -

ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் ஹசரங்கா 9 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரால் ஆர்சிபி அணியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அவரை ஆர்சிபி ரசிகர்களும் காட்டமாக விமர்சிக்க தொடங்கினர். ஆனால் ஐபிஎல் தொடரில் சோபிக்க தவறினாலும், இலங்கை அணிக்காக சிறப்பாக ஆடினார்.

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கை அணியின் அணிகுண்டாக ஹசரங்கா வெடித்து சிதறடித்தார். அந்த ஃபார்மை லங்கா பிரீமியர் லீக் தொடரிலும் ஹசரங்கா தொடர்ந்து வருகிறார். எல்பிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணியை எதிர்த்து பி லவ் கண்டி அணி விளையாடியது.

இதில் டாஸ் வென்ற பி-லவ் கண்டி அணி கேப்டன் ஹசரங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஜஃப்னா கிங்ஸ் அணி ஹசரங்கா சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. 4 ஓவர்களை வீசிய ஹசரங்கா வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஜஃப்னா அணி 20 ஓவர்களி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய பி-லவ் கண்டி அணி ஹசரங்காவின் அதிரடியான பேட்டிங்கால் 13 ஒவர்களில் இலக்கை எட்டி சாதித்தது. 3வது வீரராக களமிறங்கிய ஹசரங்கா 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 22 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அணியை வெற்றிபெற வைத்தார்.

ஹசரங்காவின் இந்த ஆட்டம் ஆர்சிபி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் ஒரு ஆட்டத்திலாவது ஆர்சிபி அணிக்காக ஹசரங்கா விளையாடி இருக்கலாம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோல் ஹசரங்காவின் பேட்டிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.