டிராவிஸ் ஹெட்டால் வந்த சிக்கல்.. ஆர்சிபி அணி வழக்குப் பதிவு.. என்ன நடந்தது?

0
69

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சன்ரைசர்ஸ் வீரருமான டிராவிஸ் ஹ்ட் உபர் நிறுவன விளம்பரம் ஒன்றில் நடித்தது தற்போது சர்ச்சை ஏற்படுத்திருக்கிறது. இந்த விளம்பரத்தில் டிராவிஸ் ஹெட் மைதானத்திற்குள் வந்து பெங்களூர் அணியின் பெயர் பலகை முன்பு ராயலி சேலஞ்சுடு என்று எழுதி வைத்து செல்கிறார்.

அப்போது பாதுகாவலர்கள் துரத்தும்போது உபர் பைக்கில் ஏறி டிராவிஸ் ஹெட் தப்பி செல்வது போல் விளம்பரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஆர்சிபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்வேதா ஸ்ரீ, உபர் நிறுவனம் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்பான்சர் நிறுவனமாக இருக்கின்றது.

- Advertisement -

டிராவிஸ் ஹெட்டால் வந்த சிக்கல்:

ஆனால் அது தேவையில்லாமல் ஆர் சி பி அணியை விமர்சித்து ஒரு விளம்பரம் தயாரித்திருக்கிறது. இது எங்கள் அணியை தவறாக காட்டும் அளவு இருக்கின்றது. விளம்பரம் செய்ய பல லட்சம் வழிகள் இருக்கின்றது. ஆனால் எங்கள் அணியின் டிரேட் மார்க்கை வைத்து தான் உங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டுமா?

அதுவும் எங்கள் அணியில் இருந்த ஒரு வீரரை இவ்வாறு எங்களுக்கு எதிராக பயன்படுத்தலாமா. உபர் நிறுவனம் செய்தது மிகப்பெரிய தவறு. எனவே இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார். எனினும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள உபர் நிறுவனம், இந்த வழக்கில் அடிப்படை விஷயத்தில் தவறு இருப்பதாக கூறியுள்ளது.

- Advertisement -

ஆர்சிபி அணி வழக்கு:

இந்த வழக்கை நீதிபதி சௌரத் பானர்ஜி விசாரித்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆர் சி பி அணியை விமர்சித்து இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களும் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: 300 ரன் அடிக்க போறோம்.. பழைய டீம் மும்பை ஜாக்கிரதை.. இது நடந்தா முடிஞ்சிடும் – இஷான் கிஷான் பேட்டி

ஏற்கனவே ஜெய்லர் திரைப்படத்தில் ஆர்சிபி அணி பயன்படுத்தி தவறான காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இந்த நிலையில் தற்போது டிராவிஸ் ஹெட் தோன்றிய விளம்பரமும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இரு அணிகளும் நடப்பு சீசனில் இதுவரை மோதிக் கொள்ளவில்லை  அடுத்த மாதம் மே 13ஆம் தேதி தான் இரண்டு அணிகளும் பெங்களூருவில் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -