300 ரன் அடிக்க போறோம்.. பழைய டீம் மும்பை ஜாக்கிரதை.. இது நடந்தா முடிஞ்சிடும் – இஷான் கிஷான் பேட்டி

0
455
Ishan

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு அணி ஒரு இன்னிங்சில் 300 ரன் அடிப்பது தொடர்பாக அதிரடியாக விளையாடக்கூடிய ஹைதராபாத் அணியில் இணைந்திருக்கும் இஷான் கிஷான் முக்கியமான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இஷான் கிஷான் இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் வாங்கியது. இவர் முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதமும் அடித்து அசத்தினார்.

- Advertisement -

300 ரன் எதிர்பார்ப்பும் கிஷான் நிலைமையும்

இந்த போட்டியில் இஷான் கிஷானின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரது சதத்தில் உதவியுடன் 286 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு எதிராக குவித்தது. இதை தொடர்ந்து வலிமையான டாப் 5 பேட்ஸ்மேன்களை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் உறுதியாக ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் அடுத்த நான்கு போட்டிகளில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியவில்லை. சமயத்தில் ஒரு போட்டியில் கூட 200 ரன்னை தொடவும் முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஆறாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அபிஷேக் ஷர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 243 ரன்னை சேர் செய்து அசத்தி இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் இஷான் கிஷானின் பேட்டிங் அந்த சதத்திற்கு பிறகு சரிந்து விட்டது.

- Advertisement -

மும்பைக்கு எதிராக 300 ரன்கள் அடிக்க முடியுமா?

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலேயே டேல் ஸ்டெய்ன் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி மும்பைக்கு எதிராக ஹைதராபாத் ஒரு இன்னிங்ஸில் 300 ரன் அடிக்கும் என்று கூறியிருந்தார். இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பழைய வீரரான இஷான் கிஷான் இடம் கேட்கப்பட்டது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025..சிறந்த பவுலர் யார்? பும்ராவா? ஸ்டார்க்?  47 போட்டி முடிவை வைத்து புள்ளி விவரம்

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இஷான் கிஷான் கூறும் பொழுது “நாம் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்பொழுது நமக்கு என்ன டார்கெட் என்று தெரியும். அப்பொழுது அதை நோக்கி போவோம். ஆனால் முதலில் நாம் பேட்டிங் செய்யும்பொழுது டார்கெட்டை உருவாக்கிக் கொள்ள முடியாது. முதல் ஆறு ஓவர்களுக்கு நாம் விளையாடி அதற்குப் பிறகு ஆடுகளத்திற்கு தகுந்ததை போல் நாம் மாறி தொடர்ந்து செல்வோம். ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் நாம் விளையாடும் பாணியில் நம்மால் ஏன் 300 ரன்கள் எடுக்க முடியாது? நிச்சயம் எடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -