ஆர்சிபி அணியால்தான் என் திட்டமே சொதப்புச்சு.. அவங்க என்னை எடுக்கலனா இதுக்கு தயாரா இருந்தேன் – ராஜத் பட்டிதார் பேட்டி

0
172

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக செயல்பட்டு புள்ளிகள் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.

கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படும் நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் ராஜாத் பட்டிதார் முதன் முதலாக ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

யாரும் என்னை எடுக்கல

2022ஆம் ஆண்டு மாற்றுவீரராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களம் இறங்கிய ராஜத் பட்டிதார், அந்த ஆண்டு அதிரடியாக செயல்பட்டு பெங்களூர் அணிக்காக சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு பட்டிதார் காயம் அடைந்த நிலையில் அந்த சீசனில் முழுவதுமாக விளையாடவில்லை. இருப்பினும் கடந்த சீசனில் விளையாட ஆரம்பித்த அவர் சிறப்பாக செயல்பட்டு ஆர்சிபி பிளே ஆஃப் தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

அவரது திறமையை கண்ட பெங்களூர் நிர்வாகம் நடப்பு ஐபிஎல் தொடரில் இவரை கேப்டனாக நியமித்தது. பேட்டிங் மட்டுமல்லாமல் ஒரு சிறப்பான கேப்டனாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் பட்டிதார் தனது தொடக்க காலம் குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை கூறியிருந்தார். அதாவது 2022ம் ஆண்டு மெகா ஏலத்தில் தான் தேர்வு செய்யப்படாத போது திருமணத்திற்கு தயாரானதாகவும் ஆனால் மாற்று வீரராக அழைப்பு வந்த பிறகு தன் வாழ்க்கை முற்றிலும் மாறியதாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

என் திட்டம் முற்றிலும் மாறியது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மெகா ஏலத்தில் நான் தேர்வு செய்யப்படாத போது எனக்கு நேரம் இருக்கிறது என்று நினைத்து எனது திருமணத்திற்கான தேதியை முடிவு செய்ய தயாரானேன். ஆனால் அப்போது நிலைமைகள் முற்றிலும் மாறி என்னை ஐபிஎல் தொடரில் விளையாட தயாராகச் சொன்னார்கள். அதற்குப் பின்னர் ஏற்கனவே திருமண தேதியை குறித்து வைத்திருந்த நிலையில் என் மனதை மாற்றிக் கொண்டு இரண்டு மாதங்கள் மட்டுமே என்று நினைத்து விளையாட சென்றேன்.

இதையும் படிங்க:இதுக்கு பேரு தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதா? தோனியிடம் ஸ்பார்க் இல்லை.. முன்னாள் வீரர் கருத்து

எனது காயம் பற்றி கூறும் போது அது மிகவும் கடினமான ஒரு காலகட்டம். நான் முதன்முதலாக 2022ஆம் ஆண்டு மாற்று வீரராக செயல்பட்டேன். அதற்கு பின்னர் எனக்கு காயம் ஏற்பட்டது. நான் கடந்த நான்கு 5 ஆண்டுகளாக காயத்தை சமாளித்து வந்தேன். இருந்தாலும் அது மோசமான நிலையில் இருந்தது. நான் நிறைய மருத்துவர்களை அணுகினேன். அதற்குப் பின்னர் ncaவை அணுகினேன். அப்போது அவர்கள் தொடர்ந்து விளையாடினால் காயம் அதிகரிக்க கூடும் என்று கூறினார்கள். அதற்கு பின்னர் தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்தேன். இருப்பினும் நான் விரைவில் குணமடைந்து மீண்டும் விளையாட தயாராவேன் என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்” என அவர் பேசி இருக்கிறார்

- Advertisement -