இதுக்கு பேரு தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதா? தோனியிடம் ஸ்பார்க் இல்லை.. முன்னாள் வீரர் கருத்து

0
14

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியிடம் ஸ்பார்க் இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர்  டாம் மூடி கூறி இருப்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி படுதோல்வியை தழுவியது.

அப்போது இளம் வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேள்வி கேட்டபோது, வீரர்களிடம் போதிய ஸ்பார்க் இல்லை என்று பதில் அளித்தார். இந்த நிலையில் தற்போது தோனியை பார்த்து அதை ஒரு விமர்சனத்தை தாம் முடி வைத்திருக்கிறார்.

- Advertisement -

தோனியிடம் ஸ்பார்க் இல்லை:

அடுத்த சீசனின் தோனிக்கு 44 வயது ஆகிவிடும் இதில் தோனி விளையாடுவாரா இல்லையா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாம் முடி, ஒவ்வொரு அணியும் கேப்டன்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அதே போல் தான் அணியும் பிரதிபலிக்கும்.

தோனி மிகவும் முக்கியமான ஒரு வீரராகவும் சிறந்த தலைவராகவும் பல ஆண்டுகளாக இருக்கின்றார். நாம் அனைவருக்குள்ளும் ஒரு நெருப்பு இருக்கும். அந்த நெருப்பு ஒரு சமயம் அணையும், அது எப்போது அணைகிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அணியை விட்டு விலகுவது தான் சரி.

- Advertisement -

ஓய்வு குறித்து தோனி சொன்னது என்ன?

நான் தோனியிடம் பார்த்தது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த வகையில் தோனியிடம் அந்த ஸ்பார்க் இல்லை என்று தான் தெரிகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தோனிக்கு இம்முறை அது குறைவாக தான் உள்ளது என்று டாம் மூடி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: பார்டர் கவாஸ்கர் தொடரில் கடைசியாக விளையாடி ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்

இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசன் விளையாடுவாரா என்று தோனியிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் என்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தில் இப்போது ஐபிஎல் முடிவடைந்து விட்டால் அடுத்த ஆறு எட்டு மாதத்தில் என்னுடைய உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது. இதனால் மீண்டும் விளையாட முடியுமா என்பதை பார்க்க வேண்டும் அதன் பிறகு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தோனி கூறி இருந்தார்.

- Advertisement -