ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 34 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் பெங்களூர் அணியின் கேப்டன் ராஜாத் பட்டிதார் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
பெங்களூர் பஞ்சாப் மோதல்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வரும் இந்த போட்டியில் டாஸ் இழந்த பெங்களூர் அணி முதல் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் களமிறங்கிய நிலையில் பில் சால்ட் 4 ரன் மற்றும் விராட் கோலி 1 ரன்னில் இருந்த நிலையில் இவர்கள் இருவரையும் அர்ஸ்தீப் சிங் வெளியேற்றினார். அதற்குப் பிறகு கேப்டன் ராஜத் பட்டிதார் ஒரு முனையில் விளையாட மறு முனையில் பெங்களூர் அணி வீரர்கள் வரிசையாக நடையை கட்டிக் கொண்டிருந்தனர்.
மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் 14 ஓவராக நடைபெற்றது. இதில் இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 26 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இந்த நிலையில் கேப்டன் ராஜத் பட்டிதார் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது சஹால் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
ஆர்சிபி கேப்டன் சாதனை
இதன் மூலமாக பெங்களூர் அணியின் கேப்டன் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அறிமுகமானதிலிருந்து பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ராஜத் பட்டிதார் இதுவரை 30 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கும் நிலையில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த 9வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 31 இன்னிங்ஸ்கள் விளையாடி இந்த சாதனையை படைத்திருக்கும் நிலையில் 1 இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பட்டிதார் சச்சினை முந்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:சரியா 17 வருடம்.. இதே நாள், இதே மாதம், இதே மைதானம்.. விராட் கோலிக்கு நடந்துள்ள வினோத அரிய நிகழ்வு.. RCB vs PBKS
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஷான் மார்ஸ் கம்பீரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடிய நிலையில் 21 இன்னிங்ஸ்கலில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக சிம்மன்ஸ் 23 இன்னிங்ஸ்கள் விளையாடி இரண்டாவது இடத்திலும், சிஎஸ்கே வீரர் கான்வே 24 இன்னிங்ஸ்கள் விளையாடி மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.






