இது பைத்தியக்காரத்தனமானது.. நானும் கோலியும் அது அவுட்டுனு ஏத்துக்கல – பாப் டு பிளேசிஸ் பேட்டி

0
558
Faf

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில், கொல்கத்தா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் 14 பந்தில் 48 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்கள். கொல்கத்தா அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. கடைசி மூன்று ஆட்டங்களாக ஆர்சிபி அணி தொடர்ந்து 10 ரன்களுக்கு மேல் ஓவர்களுக்கு கொடுத்து வருகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆர்சிபி அணிக்கு வில் ஜேக்ஸ் 32 பந்தில் 55 ரன்கள், ரஜத் பட்டிதார் 23 பந்தில் 50 ரன்கள் என அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். ஆனால் அடுத்தடுத்து அந்த அணி விக்கெட்டை இழந்ததால், கடைசி ஓவருக்கு 22 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட பொழுது, அந்த அணி 20 ரன்கள் மட்டும் எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பாக துவங்கி ஆறு பந்தில் 18 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஃபுல் டாஸ் ஆக வீசப்பட்ட ஏழாவது பந்தில் சர்ச்சைக்கு உரிய முறையில் ஆட்டம் இழந்தார். அந்தப் பந்து பார்ப்பதற்கு நோபால் போல இருந்தது. ஆனால் நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையானது.

தோல்விக்கு பின் பேசிய ஆர் சி பி கேப்டன் கூறும் பொழுது “இது பைத்தியக்காரத்தனமானது. ஆனால் கடைசியில் விதி என்பது விதிதான். வந்து இடுப்பை விட உயரமாக இருக்கிறது என்று நானும் விராட் கோலியும் நினைத்தோம். அவர்கள் பந்து கிரீசில் எந்த இடத்தில் இருந்தது என்று அளந்திருக்கிறார்கள்.இதை ஒரு அணி ஏற்கவில்லை. இன்னொரு அணி ஏற்றுக் கொள்கிறது. சில சமயங்களில் ஆட்டம் இப்படித்தான் செல்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 6 பந்து 22 ரன்.. மூன்று சிக்ஸர்.. 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி பரிதாப தோல்வி.. கேகேஆர் அணி வெற்றி

இந்த வடிவத்தில் பேட்டர்கள் செட்டிலாக நேரம் எடுக்க முடியாது. எங்களிடம் நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தது. இன்று எங்கள் வீரர்கள் செயல்பட்ட விதத்தில் நான் பெருமைப்படுகிறேன். எங்களுக்கு மிகவும் சிறப்பான ரசிகர் கூட்டம் கிடைத்திருக்கிறது. அவர்கள் முகத்தில் நாங்கள் புன்னகையை பார்த்த விரும்புகிறோம். எனவே அதற்கான வேலைகளை அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.