6 பந்து 22 ரன்.. மூன்று சிக்ஸர்.. 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி பரிதாப தோல்வி.. கேகேஆர் அணி வெற்றி

0
125
RCB

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டுபோட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து கொண்டது. கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் வெறும் 14 பந்தில் ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 48 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 50 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் கேமரூன் கிரீன் மற்றும் யாஸ் தயால் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 7 பந்தில் 18 ரன்கள் எடுத்து சர்ச்சையான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் 32 பந்தில் 55 ரன்கள், ரஜத் பட்டிதார் 23 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணி போட்டிக்குள் கொண்டு வந்தார்கள்.

ஆனால் கேமரூன் கிரீன் 6(4), மகிபால் லோம்ரர் 3(4), சுயாஸ் பிரபுதேசாய் 24(18), தினேஷ் கார்த்திக் 25(18) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் நடந்தார்கள். இதற்கு அடுத்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 22ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரை கொல்கத்தா அணியின் மிட்சல் ஸ்டார்க் வீசினார்.

- Advertisement -

இந்த ஓவரை எதிர்கொண்ட ஆர்சிபி அணியின் கரன் ஷர்மா முதல் 4 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். இதனால் வெற்றிக்கு இரண்டு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் கரண் சர்மா 7 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுக்க, ஆர்சிபி அணி பரிதாபமாக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க : நோ-பால் விக்கெட் சர்ச்சை.. சண்டையிட்ட விராட் கோலி.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

மேலும் எட்டாவது போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணிக்கு இந்தத் தோல்வி ஏழாவது தோல்வியாகும். எனவே ஆர்சிபி அணி தனது எட்டாவது போட்டியிலேயே பிளே ஆப் வாய்ப்பை துரதிஷ்டவசமாக இழந்துவிட்டது. மேலும் தொடர்ந்து ஆறு தோல்விகளை அந்த அணி அடைந்திருக்கிறது!

- Advertisement -