சிஎஸ்கே என்ன செய்யும்னு தெரியும்.. நாங்க தோத்தது இந்த இடத்துலதான் – ஆர்சிபி கேப்டன் பேச்சு

0
1297
Faf

17 ஆவது ஐபிஎல் சீசனில் தொடக்கப் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மினி ஏலத்தில் சில வீரர்களை வாங்கி வந்த ஆர்சிபி அணிமேல் சிறிது எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் அந்த அணி மீண்டும் தனது ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது.

இந்த ஆட்டம் நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளத்தில் இரண்டாவது பேட்டிங் செய்வது நன்றாக இருக்கும் என கெவின் பீட்டர்சன் மற்றும் பிரைன் லாரா இருவரும் பிட்ச் ரிப்போர்ட்டில் கூறியிருந்தார்கள். ஆனால் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ் 4.3 ஓவரில் அணி 41 ரன்கள் எடுத்திருந்தபொழுது 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து விராட் கோலி 21, ரஜத் பட்டிதார் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் ரன் இல்லாமல் வெளியேறினார்கள். கேமரூன் கிரீன் 22 பந்தில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த இடம் ஆர்சிபிக்கு போட்டியில் தோற்பதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.

இதற்கு அடுத்து ஜோடியாக விளையாடிய அனுஜ் ராவத் 48(25) மற்றும் தினேஷ் கார்த்திக் 38*(26) ரன்கள் எடுக்க ஆறு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் ஆர்சிபி அணி எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் முஸ்தஃபிஸூர் ரஹ்மான் நான்கு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

அடுத்து டார்கெட்டை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருத்ராஜ் 15(15), ரச்சின் ரவீந்தரா 37(15), ரகானே 27 (19), டேரில் மிட்சல் 22 (18), சிவம் துபே 34* (28), ரவீந்திர ஜடேஜா 25 (17) ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த இடத்தில்தான் தோற்றோம்

தோல்விக்கு பின் பேசிய ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ் “பவர் பிளேவில் முன்னேறி ரன்கள் எடுக்க வேண்டும். ஏனென்றால் சிஎஸ்கே இதற்கு அடுத்து ஸ்பின்னர்களை வைத்து ரன் எடுக்க விடாமல் அழுத்தம் தரும் என்று தெரியும். ஆனால் முதல் ஆறு ஓவர்களிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் முதல் 10 ஓவர்கள் விளையாடியது போல இந்த ஆடுகளம் மோசமாக இல்லை. நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்தோம். சிஎஸ்கே ஆட்டத்தில் எப்பொழுதும் முன்னிலையில் இருந்தது.

இதையும் படிங்க : 5784 நாட்கள்.. தொடரும் ஆர்சிபியின் சோகம்.. ருதுராஜ் கேப்டன்ஷியில் சிஎஸ்கே சிறப்பான வெற்றி

சிவம் துபே ஷார்ட் பந்துகளுக்கு கொஞ்சம் தடுமாறினார். நாங்கள் அதை வியூகமாக அமைத்தோம். மேலும் இந்த ஆடுகளத்தில் புள்ளி விபரங்களை பார்த்தால் முதலில் பேட்டிங் செய்வது நல்லதான ஒன்றாக இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவியும் இருந்தது. இங்கு முதலில் பேட்டிங் செய்தது சரியான முடிவு. சில நாட்களாக கிரிக்கெட் விளையாடாத தினேஷ் கார்த்திக் நன்றாக விளையாடியது சாதகமான விஷயம். அனுஜ் ராவத் கடந்த ஐபிஎல் சீசனிலும் சில போட்டிகள் நன்றாக விளையாடியிருந்தார். நாங்கள் பேட்டிங்கில் பவர் பிளேவில் தவறவிட்டு தோற்று விட்டோம்” என்று கூறி இருக்கிறார்.