5784 நாட்கள்.. தொடரும் ஆர்சிபியின் சோகம்.. ருதுராஜ் கேப்டன்ஷியில் சிஎஸ்கே சிறப்பான வெற்றி

0
532
IPL2024

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே 17ஆவது ஐபிஎல் சீசன் இன்று மிகக் கோலாகலமாக துவங்கியது.

முதல் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆர்சிபி அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 35(23), விராட் கோலி 21(20), ரஜத் பட்டிதார் 0(3), கிளன் மேக்ஸ்வெல் 0(1), கேமரூன் கிரீன் 18 (22) என வரிசையாக வெளியேறினார்கள்.

- Advertisement -

ஆர்சிபி அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த பொழுது ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இருவரும் பொறுப்பாக விளையாடியதோடு அதிரடியாகவும் விளையாடி ஆர்சிபி அணியை சவாலான ஸ்கோருக்கு கூட்டிச் சென்றார்கள். இந்த ஜோடி 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அனுஜ் ராவத் 48(25), தினேஷ் கார்த்திக் 38*(26) ரன்கள் எடுத்தார்கள். சிஎஸ்கே தரப்பில் முஸ்தாஃபிசூர் ரஹ்மான் நான்கு ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து 4 விக்கெட் கைப்பற்றினார். தீபக்சகர் நான்கு ஓவர்களுக்கு 37 ரன்கள் தந்து 1 விக்கெட் கைப்பற்றினார்.

சிஎஸ்கே சிறப்பான வெற்றி

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புது கேப்டன் ருதுராஜ் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஆரம்பித்து 15(15) ரன்களில் வெளியேறினார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா அதிரடியாக 15 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர் உடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து வந்த ரகானே 27(19), டேரில் மிட்சல் 22 (18 ) கேமரூன் கிரீனில் பவுன்சர் திட்டத்தில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து இம்பேக்ட் பிளேயராக சிவம் துபே உள்ளே வர அவருடன் ரவீந்திர ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல்,66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 18.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை வெல்ல வைத்தார்கள். சிவம் துபே 34(28), ரவீந்திர ஜடேஜா 25(17) ரன்கள்எடுத்து களத்தில் நின்றார்கள். ஆர்சிபி தரப்பில் கேமரூன் கிரீன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க: 4 விக்கெட் 10 பந்து.. சிஎஸ்கே வரலாற்றில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 2வது வீரராக சாதனை

இறுதியாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2008 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீழ்த்தி இருந்தது. இதற்குப் பிறகு 5784 நாட்கள் ஆகியும் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணியால் வீழ்த்த முடியவில்லை. அவர்களுடைய இந்த சோகம் ஆயிரக்கணக்கான நாட்கள் தாண்டி நீடிக்கிறது.