நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. ஆறு போட்டிகள் தொடர் தோல்விக்குப் பிறகு ஆர்சிபி அணி இந்த போட்டியில் வலிமையான ஹைதராபாத் அணியை வென்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆர்சிபி அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் பாப் டு பிளிசிஸ் 12 பந்தில் 25 ரன்கள், வில் ஜேக்ஸ் ஒன்பது பந்தில் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்த ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடினார். 20 பந்துகள் சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 34 பந்தில் 65 ரன்கள் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதற்கு அடுத்து பெரிய ஷாட் விளையாட முடியாமல் தடுமாறிய விராட் கோலி 43 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ஆர்சிபி அணிக்கு குறிப்பிடும்படி கேமரூன் கிரீன் 20 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் பந்துவீச்சு தரப்பில் ஜெயதேவ் உனட்கட் 4 ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. அந்த அணிக்கு ஹெட் 1(3), அபிஷேக் ஷர்மா 31(13), மார்க்ரம் 7(8), நிதிஷ் ரெட்டி 13(14), கிளாசன் 7(3), அப்துல் சமாத் 10(6), கம்மின்ஸ் 31(15), புவனேஸ்வர் குமார் 13(13), ஷாபாஷ் அகமத் 40(37), ஜெயதேவ் உனட்கட் 8(10) ரன்கள் எடுக்க, அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : புவிக்கு ஒரே ஒரு ஓவர்.. கம்மின்ஸ் கேப்டன்ஷியில் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் வல்லுனர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கடந்த மாதம் மார்ச் 25ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் வெற்றி பெற்று இருந்தது. மிகச் சரியாக ஒரு மாதம் கழித்து தற்போது வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் 100 சிக்ஸ் அடித்து இருக்கிறது. மேலும் எட்டாவது போட்டியில் விளையாடிய ஹைதராபாத் இந்த போட்டியில் வென்று இருந்தால் 12 புள்ளிகள் பெற்று இருக்கும். தற்பொழுது சிஎஸ்கே அணிக்கு நல்லது செய்யும் விதமாக ஆர்சிபி அணி வெற்றி பெற்று காப்பாற்றி இருக்கிறது