புவிக்கு ஒரே ஒரு ஓவர்.. கம்மின்ஸ் கேப்டன்ஷியில் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் வல்லுனர்கள்

0
725
Cummins

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி பந்து வீசிய பொழுது கேப்டன்ஷியில் பாட் கம்மின்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணி பாப் டு பிளிசிஸ் 25(12) ரன்களில் வெளியேறினார். பெங்களூர் அணி பவர் பிளேவில் முதல் ஆறு ஓவர்களுக்கு ஒரு விக்கெட் மட்டும் இழந்து 61 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதில் பவர் பிளேவில் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு கம்மின்ஸ் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச வாய்ப்பு தந்தார். மேலும் இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு தந்தார். புவனேஸ்வர் குமார் ஒரு ஓவரில் 14 ரன்கள் தர, நடராஜன் தான் வீசிய முதல் ஓவரில் விக்கெட் கைப்பற்றியதால், கம்மின்ஸ் அவருக்கு இரண்டாவது ஓவரை கொடுத்தார்.

இதற்கு அடுத்து இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்ட ஜெயதேவ் உனட்கட்டை கம்மின்ஸ் பந்துவீச்சுக்கு கொண்டு வந்தார். இன்று உனட்கட் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் நிறைய வேரியேஷன்களை முயற்சி செய்து வெற்றிகரமாக வீசினார். இதற்கு பலனாக 20 பந்தில் அதிரடியாக 50 ரன்கள் எடுத்த ரஜத் பட்டிதார் விக்கெட் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கம்மின்ஸ் உனட்கட்டுக்கு தொடர்ந்து நான்கு ஓவர்களையும் பந்து வீச வாய்ப்பு கொடுத்தார். இதில் உனட்கட் மேலும் விராட் கோலி மற்றும் மகிபால் லோம்ரர் விக்கெடுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக பெங்களூர் அணியின் ரன் வேகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. உனட்கட் 4 ஓவர்களில் 30 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். மேலும் இன்று ஷாபாஷ் அகமதுக்கு மூன்று ஓவர்கள் கொடுத்து, அவர் அதில் வெறும் 14 ரன்கள் மட்டுமே தந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : பவர் பிளே முடிந்து நடந்த சோகம்.. அரை சதத்தை கொண்டாடாத கோலி.. களத்தில் என்ன நடந்தது?

ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச வாய்ப்பு பெற்றவர்களில் யார் நன்றாக செயல்பட்டார்கள், அவர்களுடன் அப்படியே சென்று பெங்களூரு அணியை பெரிய ரன்களுக்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டார். இதன் காரணமாக அனுபவ வீரர் புவனேஸ்வர் குமாருக்கு ஒரு ஓவர் மட்டுமே தந்தார். இந்த இடத்தில் கேப்டனாக அனுபவ வீரருக்கு ஓவர் தந்தே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயத்தை அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. டி20 கிரிக்கெட்டில் வீரர்களுக்கு மதிப்பளிப்பது மற்றும் ஈகோ பார்ப்பது எதுவுமே வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் அதை உணர்ந்து கேப்டன்சி செய்திருக்கிறார்.