சிஎஸ்கே வீரரிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை.. அதுவும் 3 முறை.. எதுக்கு தெரியுமா?

0
123

விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்து பயன்படுத்தி வீரர்கள் சிக்கிக் கொள்வது என்பது தொடர்கதையாக நடத்தப்படுவது தான். சிலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடை செய்யப்பட்ட மருந்தை வேறு மருத்துவ உபாதைகளுக்கு எடுத்துக்கொண்டு சிக்கிக் கொள்வார்கள்.

இப்படி இந்தியாவில் கடைசியாக மாட்டிக் கொண்ட வீரர் என்றால் அது பிரித்விஷா தான். ஆனால் தலைவலிக்கு எடுத்துக் கொண்ட மாத்திரையில் தடை செய்யப்பட்ட மருந்து இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் ஆறு மாத காலம் தடை பெற்றார்.

- Advertisement -

இந்த நிலையில் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் அப்படி ஒரு தடையை இதுவரை சமீபத்தில் பெறவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்க மருந்து சோதனை நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மட்டும் 500 பேரிடமிருந்து ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் கிரிக்கெட்டில் மட்டும் 58 வீரர் வீராங்கனைகளிடமிருந்து ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்காத வீரர்களிடம் ஊக்க மருந்து சோதனை அடிக்கடி நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் மட்டும் மூன்று முறை ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஜடேஜா காயத்திலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பினார். இந்த சூழலில் ஜடேஜாவுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ,மார்ச் 26 ஆம் தேதி, ஏப்ரல் 26 ஆம் தேதி என மூன்று முறை அவரிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

இதேபோன்று ஹர்திக் பாண்டியாவிடமும் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் இந்த பரிசோதனை நடத்தப்படவில்லை. இதேபோன்று இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தானா ஆகியோரிடமும் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்த டேவிட் வீய்ஸி, டேவிட் மில்லர்,கேமரான் கிரீன், சுனில் நரேன், அண்ட்ரூ ரசூல் டேவிட் வார்னர் ஆகியோரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.