14 ஓவர் 81 ரன்.. கேகேஆர்-க்கு எதிரா எங்க பிளான் இதுதான்.. இனிமே சாதாரண கிரிக்கெட் விளையாடினாலே போதும் – ஜடேஜா பேட்டி

0
306
Jadeja

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரவில் பனிப்பொழிவு வருகின்ற காரணத்தினால் அதனை பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே இந்த முடிவை எடுத்தது. மேலும் சிஎஸ்கே அணியில் முஸ்தபிஷூர் ரஹ்மான், சமீர் ரிஸ்வி சர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றார்கள். தீபக் சகர் காயத்தாலும், மொயின் அலிக்கு இடமில்லாததாலும் இருவரும் விளையாடவில்லை.

இந்த நிலையில் கேகேஆர் அணி பேட்டிங்கில் துசார் தேஷ்பாண்டே முதல் பந்தில் பில் சால்ட் விக்கெட்டை இழந்தது. இதற்கு அடுத்து சுனில் நரைன் மற்றும் இந்திய இளம் வீரர் ரகுவன்சி இருவரும் பவர் பிளேவில் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பவர் பிளே முடிந்து ரவீந்திர ஜடேஜாவின் முதல் ஓவரின் முதல் பந்தில் 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ரவீந்திர ஜடேஜா இத்தோடு நிற்காமல் சுனில் நரைன் 27 (20), வெங்கடேஷ் ஐயர் 3 (8) இருவரையும் வெளியே அனுப்பி வைத்தார். இதற்கு அடுத்து ரமன்தீப் சிங் 13 (12) ரன்னில் தீக்சனா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அபாயகரமான ரிங்கு சிங்குவை 9 (14) துஷார் தேஷ்பாண்டே அவுட் ஆக்கினார். மேலும் ரசல் 10 (10), ஸ்ரேயாஸ் ஐயர் 34 (32), மிட்சல் ஸ்டார்க் 0 (3), அனுக்குல் ராய் 3* (3), வைபவ் அரோரா 1* (1) ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

20 ஓவர்கள் முடிவில் கே கே ஆர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. ஜடேஜா நான்கு ஓவர்களுக்கு 18 ரன் மட்டுமே தந்து 3 விக்கெட், துஷார் தேஷ்பாண்டே நான்கு ஓவர்களுக்கு 33 ரன் தந்து மூன்று விக்கெட், முஸ்தஃபிஸூர் ரஹ்மான் நான்கு ஓவர்களுக்கு 22 ரன்கள் 2 விக்கெட் கைப்பற்றினார். முதல் ஆறு ஓவர்களில் 56 ரன்கள் எடுத்த, அடுத்த 14 ஓவர்களில் 81 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியின் பந்து வீச்சுக்கு பிறகு பேசி ரவிந்திர ஜடேஜா “ரஹ்மான் இந்த விக்கெட்டில் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். விக்கெட்டை பயன்படுத்தி சரியாக மெதுவாக வீசினார். இப்பொழுது நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது பனிப்பொழிவு அதிகம் இருக்கும். இதனால் எங்களுக்கு பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். இது பந்து பயங்கரமாக திரும்பும் ஆடுகளம் கிடையாது. பந்து மெதுவாக திரும்பும் ஆடுகளம். பந்து பேட்டுக்கு சரியான வேகத்தில் வரவில்லை. நாங்கள் ஸ்டெம்ப்பை குறி வைத்து வீசுவதை திட்டமாக வைத்தோம். இப்பொழுது நாங்கள் சாதாரண கிரிக்கெட் விளையாடினாலே வென்று விடுவோம்” என்று கூறியிருக்கிறார்.