2 பந்து 2 விக்கெட்.. தினேஷ் கார்த்திக் பேச்சுக்கு அஸ்வின் பதிலடி.. கும்ப்ளே சாதனை முறியடிப்பு

0
479
Ashwin

ஜார்க்கண்ட் ராஞ்சி மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேக்கிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்த முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி போராடி 307 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணி இந்திய அணியை விட முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலை பெற்றது. நான்காவது இன்னிங்ஸை இந்திய அணி விளையாட வேண்டி இருக்கின்ற காரணத்தினால், மேலும் முன்னிலையும் கிடைத்திருப்பதால் இங்கிலாந்து அணி உற்சாகமானது.

இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்த முறை கேப்டன் ரோஹித் சர்மா தமது இரட்டை சுழல் பந்து வீச்சு தாக்குதல் பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் பந்து வீச கொண்டு வந்தார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை சர்ப்ராஸ்கான் மூலம் எளிமையான முறையில் வீழ்த்தி அனுப்பினார். 15 பந்தில் 15 ரன் எடுத்து அவர் வெளியேறினார். இதற்கு அடுத்த பந்தில் உள்ளே வந்த ஒல்லிப போப்பை எல்பிடபிள்யு செய்து அசத்தினார்.

மிக முக்கியமான நேரத்தில் இந்திய அணிக்கு இரண்டு திருப்புமுனைகளை அஸ்வின் ஒரே ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் கொண்டு வந்திருக்கிறார். இங்கிலாந்து இளம் சுழல் பந்துவீச்சாளர்களை விட இந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பின்தங்கி இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். தற்போது இதற்கு பதிலடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : 177/7 to 307.. இந்திய அணியை கட்டி இழுத்த துருவ் ஜுரல்.. எதிரணியும் பாராட்டும் இன்னிங்ஸ்

மேலும் இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக அணில் கும்ப்ளே சாதனையை முறியடித்து, 351 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.