இந்திய கிரிக்கெட்

ருதுராஜ் இங்க இப்படித்தான் நடக்கும்.. மனச தளரவிடாம இதை செய்யுங்க – அஸ்வின் தந்த அறிவுரை

இன்று நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ருதுராஜ் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஆறுதல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த தென் ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத காரணத்தினால் ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி வந்திருப்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

தவறான வாய்ப்பு கொடுக்கப்பட்டது

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் பேக்கப் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தொடர்கிறார். இந்த நிலையில் இவர்தான் மாற்று வீரராக இருப்பார் என்றால் கடந்த தென் ஆப்ரிக்க தொடரின் போதே வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க தொடரில் ஒரு தொடருக்கு மட்டும் விளையாட வாய்ப்பு இருந்த ருதுராஜை விளையாட வைத்தார்கள். தற்போது அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் காயம் குணமடைந்து வந்துவிட்டார். இப்பொழுது புதிதாக ரிஷப் பண்ட்டை அந்த இடத்திற்கு பேக்கப் பேட்ஸ்மேன் ஆக வைத்திருக்கிறார்கள். இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

இங்கு இப்படிதான்

மேலும் கடந்த தென் ஆப்பிரிக்க தொடரில் நான்காவது இடத்தில் களம் இறங்கிய ருதுராஜ் ஒரு சதத்தை அடித்தார். இந்த நிலையில் அவர் உடனடியாக கழட்டி விடப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : நியூசிலாந்து ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத 3 முக்கிய வீரர்கள்.. எதிர்காலம் என்ன?

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ருதுராஜ் இப்போது உன்னை தேர்வு செய்யாதது குறித்து நீ என்ன நினைத்தாலும் சரி, இதிலிருந்து எழுந்து நில், தயாராகு, களத்தில் இரு. இதை ஒரு போதும் கைவிடாதே. அணியில் இடம் கிடைக்காமல் போவதை ஏற்றுக் கொள்வது சுலபம் இல்லை. ஆனால் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு போட்டி நிறைய இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by