இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு மீண்டும் மறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாதம் இந்தியாவிற்கு வர இருக்கும் நியூசிலாந்து அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஜனவரி 11, 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் விளையாடுகிறது.
முதல் முக்கிய வீரர்
இந்த நிலையில் இதற்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து டி20 தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேசமயத்தில் தற்போது இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும், இந்திய அணியில் மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. பிரசித் கிருஷ்ணாவுக்கு கொடுக்கும் வாய்ப்பை ஏற்கனவே நிரூபித்த முகமது ஷமிக்கு கொடுக்காதது கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.
அடுத்த இரண்டு வீரர்கள்
கடந்த தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் சதம் அடித்திருந்தால். இந்த நிலையில் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் வந்திருப்பதால் ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: 212 ரன்.. மாஸ் காட்டிய கேரளா.. பின்னி எடுத்த சஞ்சு சாம்சன் அதிரடி சதம்.. டி20 உலக கோப்பைக்கு தயார்
மேலும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்த அக்சர் படேல் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் புறக்கணிக்கப்பட்டு ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார். தற்போது நியூசிலாந்து தொடரிலும் அக்சர் படேலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருடைய இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா தொடர்கிறார்.






