75 பந்து 157 ரன்.. சர்ப்ராஸ் கானுக்கு சிஎஸ்கே ஆட வாய்ப்பு தரணும்.. முக்கிய காரணம் இதுதான் – அஸ்வின் கோரிக்கை

0
18
Ashwin

இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சர்ப்ராஸ் கானுக்கு சிஎஸ்கே பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

தற்போது இந்திய உள்நாட்டு டி20 வடிவத்தில் சையத் முஸ்தாக் அலி தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விஜய் ஹசாரே டிராபி என இரண்டு தொடர்களிலும் சர்ப்ராஸ்கான் அசுர பார்மில் இருந்து வருகிறார். எனவே அவரை சிஎஸ்கே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

75 பந்து 157 ரன்

சர்பராஸ் கான் நேற்று விஜய் ஹசாரே டிராபியில் 75 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் உடன் 157 ரன்கள் கோவா அணிக்கு எதிராக எடுத்து மிரட்டினார். மேலும் இதே தொடரில் ஒரு அரை சதத்தையும் ஏற்கனவே அளித்திருக்கிறார். தற்போது அவர் சிறந்த பார்மில் இருந்து வருகிறார்.

இத்துடன் சிஎஸ்கே அணியில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி ரன்கள் எடுப்பதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆனால் இந்த ஷாட்டுகள் விளையாடுவதில் சர்ப்ராஸ் கான் மிகச்சிறந்தவராக இருக்கிறார். நேற்றும் இந்த மாதிரி விளையாடி நிறைய ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

காத்திருக்க முடியவில்லை

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” சையத் முஸ்டாக் அலி தொடரில் 100*(47), 52(40), 64(25), 73(22). அந்த ஃபார்ம் ஹசாரே அணியில் 55(49) ரன்கள் எடுத்து, அதைத் தொடர்ந்து இன்று 14 சிக்ஸர்களுடன் 157(75) ரன்கள் எடுத்து அசத்தலாக விளையாடியது. மிடில் ஓவர்களில் அவர் தனது ஸ்வீப்கள் மற்றும் ஸ்லாக் ஸ்வீப்கள் மூலம் சுழல் பந்துகளை எப்படி அடிக்கிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது”

இதையும் படிங்க : 2026 டி20 உகோ.. ஆஸி அணி அறிவிப்பு.. 3 காய வீரர்களுக்கு வாய்ப்பு.. ஸ்பின்னுக்கு முன்னுரிமை – புதிய திட்டங்கள்

“சப்ராஸ்கான் கதவை தட்டவில்லை உடைத்துக் கொண்டிருக்கிறார்.சிஎஸ்கே அவரை பிளேயிங் XII-க்குள் கொண்டு வந்து தனது ஊதா நிற பேட்சைப் பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும்? இந்த சீசனில் யெல்லோவ் அணிக்கு யார் பேட்டிங் செய்வது ஒரு உண்மையான பிரச்சனை! ஐபிஎல் 2026-க்காக காத்திருக்க முடியாது!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -