2026 டி20 உகோ.. ஆஸி அணி அறிவிப்பு.. 3 காய வீரர்களுக்கு வாய்ப்பு.. ஸ்பின்னுக்கு முன்னுரிமை – புதிய திட்டங்கள்

0
69
Australia

இந்த ஆண்டு 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி புதிய திட்டங்கள் உடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த டி20 உலகக் கோப்பையில் இலங்கை ஓமன் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம் பெற்று இருக்கும் குழுவில் ஆஸ்திரேலிய அணி இடம் பெற்று இருக்கிறது. மேலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் இருக்கும் என்பதால் அதற்கேற்ற வகையில் அணி உருவாக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

காயம் அடைந்த வீரர்களுக்கு வாய்ப்பு

2026 டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அணிகளில் ஜனவரி 31ஆம் தேதி வரையில் மாற்றங்கள் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் டிம் டேவிட் மூவரும் காயமடைந்து இருந்தாலும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. காயம் குணமடைந்து விட்டால் இவர்கள் அணியில் தொடர்வார்கள்.

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியா அணியில் ஜோஸ் இங்கிலீஷ் மட்டுமே ஒரே ஒரு விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கிறார். சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் இருக்கும் என்பதால் கூடுதல் சுழல் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

சுழல் பந்துவீச்சுக்கு முன்னுரிமை

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இடதுகை சுழல் பந்துவீச்சு பேட்டிங் ஆல் ரவுண்டர் கூப்பர் கனோலி, வலதுகை சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வேக்ஸ்வெல், வலதுகை சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா மற்றும் குன்ஹமான் என மொத்தம் ஐந்து சுழல் பந்துவீச்சு விருப்பங்கள் இருக்கிறது. கேப்டனாக மிட்சல் மார்ஸ் தொடர்கிறார்.

இதையும் படிங்க : யுவராஜ் சிங்தான் என் முதல் ஹீரோ.. நான் வளர்ந்ததே அவரைப் பார்த்துதான்.. இளம் ஆஸி வீரர் பிரமிப்பு

ஆஸ்திரேலியா அணி : மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி, பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (கீப்பர்), மேத்யூ குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.

- Advertisement -