இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்காக இந்த ஒரு விஷயத்தை.. செய்ய சொல்லி பும்ராவிடம் கேட்பேன்.. வேறு வழி இல்லை – ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு செய்யப் போகும் மாற்றங்கள் குறித்து சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

தொடரில் பின்தங்கிய நிலை

சுப்மான் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தும் அதை அவர்கள் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி வெற்றி பெற்றனர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா அவரது பணிச்சுமை மேலாண்மை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தொடருக்கு முன்பே கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி தற்போது தொடரில் பின்தங்கி இருக்கும் நிலையில் சமநிலை அடைவதற்காக பும்ராவை அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட செய்வேன் எனவும், அதற்கடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு போதுமான இடைவெளி இருப்பதால் அவருக்கு போதுமான ஓய்வு கிடைக்கும் எனவும் மேலும் குல்தீப் யாதவை உள்ளே கொண்டு வருவேன் எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நான் இதை செய்ய சொல்வேன்

இதுகுறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “நாங்கள் 1-0 என்ற கணக்கில் பின்தங்கி இருப்பதை கண்டு தொடரில் சமநிலை அடைய பும்ராவை எடுத்த டெஸ்டில் விளையாடச் சொல்வேன். அதற்குப் பின்னர் அவர் இடைவெளி எடுக்கலாம். மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கு போதுமான இடைவெளி இருப்பதால் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு இரண்டாவது டெஸ்டில் விளையாடலாம். மேலும் நான் ஒரு மாற்றமாக குல்தீப் யாதவை உள்ளே கொண்டு வருவேன்.

இதையும் படிங்க:30 ரன்னுக்கு 20 முறை அவுட் ஆகற ஆளு ரிஷப் பண்ட்.. அந்த ஒரு விஷயம் அவமானம் ஆனது – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

வேறு எந்த மாற்றமும் செய்ய மாட்டேன். இந்தியாவில் பல பேட்டிங் ஜாம்பவான்கள் கடவுள் போன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். நாங்கள் இன்னும் பும்ராவை அந்த நிலைக்கு உயர்த்தவில்லை. ஆனால் அவர் சிறந்த செயல் திறன் மிக்க ஒரு வீரர் அபாரமான வேகப்பந்துவீச்சாளர்” என அஸ்வின் பெருமைப்படுத்தி பேசி இருக்கிறார். இந்திய அணி தொடரில் சமநிலை அடைய அடுத்த டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட வேண்டும் என்பதே அஸ்வின் விருப்பமாகும்.

- Advertisement -
Published by

Recent Posts