இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் அதிக ரிஸ்க் எடுத்து பேட்டிங் செய்கிறார் என்றும், அவர் 30 ரன் எடுப்பதற்குள் 20 முறை அவுட் ஆவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதைத்தான் எண்ணி வைத்திருப்பதாகவும் ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மேலும் இந்த ஒரு போட்டியின் மூலமாக பல சாதனைகளையும் அவர் படைத்தார். ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவராக அவர் இருந்த போதும் இந்திய அணி தோல்வி அடைந்தது அதிர்ச்சியாக அமைந்தது.
30 ரன்னுக்கு 20 முறை அவுட்
ரிஷப் பண்ட் பேட்டிங் அணுகுமுறை குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் லெஜன்ட் பேட்ஸ்மேன் ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். இதில் உலகிலேயே ரிஷப் பண்ட் அதிக ரிஸ்க் எடுத்து பேட்டிங் செய்யக் கூடியவராக இருக்கிறார் என்றும், ஆனால் முடிவில் அவர் வெற்றி பெறக்கூடியவராக மாறிவிடுகிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது ” ரிஷப் பண்ட் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார். இது உங்களை சில நேரங்களில் விரக்தி அடைய வைக்கும். அவர் முதல் 30 ரன் எடுப்பதற்குள் 20 முறை அவுட் ஆவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்ததை என்னால் எண்ணி சொல்ல முடியும். ஆனால் அவர் அப்படி ஆட்டம் இழந்து விடவில்லை. அவர் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை எடுக்கிறார். 100 முறைக்கு 99 முறை அவர் வெற்றியாளராக இருக்கிறார்.
சோபாவில் படுத்துக் கொண்டிருந்தேன்
“நான் சோபாவில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ததை பார்க்கும் பொழுது ‘ ரிஷப் நீ என்ன செய்கிறாய்? இப்போது அதற்கான நேரம் இல்லை’ என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் முடிவுகளை பாருங்கள் அவர் சிறப்பாக இருக்கிறார். அவர் ஆட்டநாயகன் ஆவதற்கு தகுதியாக இருந்தும் போட்டியில் வெல்ல முடியாதது அவமானம் ஆனது”
இதையும் படிங்க : இந்தியாவிற்கு திடீரென கிளம்பிய இளம் வீரர்.. கம்பீருக்கு எதிராக அகர்கர் நடவடிக்கையா?.. என்ன நடந்தது?
“திடீரென இந்திய அணியின் தோல்வியின் காரணமாக நிறைய கேள்விகள் எழுகிறது. ஊடகவியலாளர்கள் மாற்றம் வேண்டும் என தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இந்த நிலையில் பீதி அடைய வேண்டிய தேவை எதுவும் கிடையாது. இது ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர்” என்று கூறி இருக்கிறார்.






