இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் கில் இருவரது தந்திரோபாயங்கள் மற்றும் போட்டி விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
நான்கு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இங்கிலாந்து 2 போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றிருக்கிறது. ஐந்தாவது போட்டியை இங்கிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்ற 35 ரன்கள் தேவை என்ற நிலையில் நான்கு விக்கெட் கைவசம் இருக்கிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்ற செய்தி கொண்டு வருகிறேன். இந்த தொடரில் விளையாட்டு விழிப்புணர்வு இல்லாததும், நமது திட்டங்களில் புத்திசாலித்தனம் இல்லாததையும் உணர்ந்தேன். இங்கிலாந்து முன்னிலை வகிப்பதற்கும் இந்தியா பின் நிலையில் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணமாக இருந்திருக்கிறது”
“கேப்டனாக கில் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். அதே சமயத்தில் நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக சுழல் பந்துவீச்சை எளிதாக விளையாட முடியும் என்று நினைக்கும் பொழுது நீங்கள் சுழல் பந்துவீச்சாளரை பந்துவீச்சில் பயன்படுத்த மாட்டீர்கள். நீங்கள் சரியான சூழ்நிலையில் சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வராவிட்டால், பிறகு அவர் தற்காப்பாக மட்டுமே பந்து வீசக்கூடியவராக மாறிவிடுகிறார்”
“ஹாரி புரூக் 20 ரன்கள் எடுத்த பிறகு அதிரடி ஆரம்பித்தார். அந்த நேரத்தில் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்திருந்தால் நிச்சயம் ஒரு முனையில் ரன்னை கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஒரு முனையில் ஸ்பின்னர் இன்னொரு முனையில் வேகப்பந்துவீச்சாளர் என்று போயிருக்கலாம். இதையெல்லாம் மனதில் வைத்து வாஷிங்டன் சுந்தரை முன்கூட்டியே கொண்டு வந்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க : 20 நிமிடம் இருக்கு.. சன் கிளாஸ் போட்டு இருக்காங்க.. இந்திய பவுலிங்கை நிறுத்தினது ஏன்? – ஸ்டூவர்ட் பிராட் கேள்வி
“இந்த தவறுகளை செய்து கொண்டிருப்பது பெரிய இடைவெளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மெசேஜ் எல்லாம் நடுவில் எப்படி செல்கிறது என்று தெரியவில்லை. மேலும் ஓய்வறையில் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்தும் நமக்கு தெரியாது. இன்றைய காலகட்டத்தில் இந்த தவறுகளை நிச்சயம் நம்மால் செய்யாமல் இருந்திருக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.