இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நேற்று போட்டியை 6:00 மணிக்கு முடித்துக் கொண்டது சோம்பேறித்தனமானது என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்க அந்த அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்படுகிறது.
ஆடுகளத்தில் ஹெவி ரோலர் விளையாட்டு
ஒரு டெஸ்ட் போட்டியின் நாள் முடிவில் எந்த அணி பேட்டிங் செய்கிறதோ அந்த அணி அடுத்த நாள் போட்டியை துவங்குவதற்கு முன்பாக எந்த வகையான ரோலரை பயன்படுத்தி ஆடுகளத்தை சீர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யலாம். இந்த வகையில் ஓவல் ஆடுகளத்தில் தொடர்ந்து ஹெவி ரோலர் நாளின் துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏனென்றால், இந்த ஓவல் ஆடுகளத்தில் ஹெவி ரோலர் பயன்படுத்தும் பொழுது ஆடுகளம் இருக்கமடைந்து குறைந்தது 30 ஓவருகளுக்கு பேட்டிங் செய்வது எளிதானதாக இருக்கிறது. இதன் காரணமாகவே இன்று காலை ஹெவி ரோலரை பயன்படுத்தி ஆடுகளத்தை இருக்கமடைய வைத்து இங்கிலாந்து வெற்றி பெற திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காகவே போட்டி நேற்று முன்கூட்டி முடித்து கொல்லப்பட்டது என குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இது சோம்பேறித்தனமானது
நேற்று கடைசி நேரத்தில் வெளிச்சம் இல்லை என்று போட்டி நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் மழையும் வந்தது. ஆனால் உடனடியாக வெயில் வந்து மக்கள் சன் கிளாஸ் அணிந்து கொண்டார்கள். ஆனாலும் போட்டி துவங்கப்படவில்லை. அப்படி துவங்கப்பட்டு இரண்டு விக்கெட்டுகள் இழந்திருந்தால் மேலும் அரை மணி நேரம் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும். இதனால் நேற்றே போட்டி முடிவுக்கு வந்திருக்கும். ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எங்க நிர்வாகத்துக்கு பொது அறிவு இல்லையா? அவமானமா இருக்கு.. போட்டிய நிறுத்துனது இந்தியாவுக்கு பாதகம் – நாசர் ஹுசைன் விமர்சனம்
இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் பேசும் பொழுது ” போட்டி துவங்குவதற்கு 20 நிமிடங்கள் இருக்கிறது என்று காட்டும்வேளையில் மக்கள் வெயிலுக்காக தங்களுடைய சன் கிளாசை அணிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை நேற்றே காண்பதற்கு ரசிகர்கள் முழுவதும் தகுதியானவர்கள். மேலும் மாலை 6:00 மணிக்கு போட்டியை முடித்தது சோம்பேறித்தனமான முடிவு. இதை யார் செய்தார்கள்? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.






