தற்போது சாய் சுதர்சனின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தனக்கு மிகவும் கவலையாக இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருடைய இடத்தில் ஸ்பின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முக்கியமான மூன்றாவது இடத்திற்கு ஒரு பேட்ஸ்மேனை தயார் செய்ய முயற்சி செய்யாதது விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது.
எனக்கு கவலையாக இருக்கிறது
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “எனக்கு சாய் சுதர்சனை நினைத்து கவலையாக இருக்கிறது. அவர் மிகவும் நல்ல வீரர். தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர் மன நிலை என்னவாக இருக்கும். ஒரு அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பது எப்போதும் அதிகம் என்று நான் நினைக்கிறேன். அதில் வாஷிங்டன் சுந்தருக்கு நீங்கள் பந்து வீச வாய்ப்பே கொடுக்கவில்லை. இது வீரர்களின் தன்னம்பிக்கையில் விளையாடப் போகிறது”
“ஒரு டி20 போட்டியில் ஆல்ரவுண்டர்களை அதிகம் தேர்ந்தெடுப்பார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உங்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் பிளேயர்கள் தேவை. மேலும் நீங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், நிலைத்தன்மையை அணியில் உருவாக்குவதும் முக்கியமான வேலையாக இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேப்டன் கில் டாஸ் வெல்வேன் என்று கூறியிருந்தார். முதலில் அதற்கு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்”
வாஷிங்டன் சுந்தர் சரியா?
“தற்போது வாஷிங்டன் சுந்தர் இந்த மூன்றாவது இடத்திற்கு பயன்படுத்தப்படுகிறார். அவருக்கு திறமை இருக்கிறது. ஆனால் அவர் இந்த இடத்திற்கு சரியா இல்லையா? என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். சாய் சுதர்சனுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேற்கொண்டு என்ன நடக்கிறது? என்று நாம் பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க : விராட் கோலி கிட்ட கம்பீர் பாடம் கத்துக்கணும்.. தொடர்ந்து ஒரே தப்பை செய்யக்கூடாது – வாசிம் ஜாபர் விமர்சனம்
“முதலில் நீங்கள் ஒரு நல்ல டெஸ்ட் அணியை உருவாக்க வேண்டும் என்றால், மூன்றாவது இடத்தில் உங்களுக்கு ஒரு நல்ல நிரந்தரமான வீரத் தேவை. இதுவரை இந்த இடங்களில் விளையாடி வந்த வீரர்கள் எப்படி ஆனவர்கள் என்பதை நீங்களே பாருங்கள். நீங்கள் இதற்கு வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தால் சில ஆண்டுகள் மட்டுமே நீங்கள் இருப்பீர்கள். மூன்றாவது இடத்துக்கு ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்வது சூழ்நிலையை பொறுத்து அமையாது. அது நிரந்தரமாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






