விராட் கோலி கிட்ட கம்பீர் பாடம் கத்துக்கணும்.. தொடர்ந்து ஒரே தப்பை செய்யக்கூடாது – வாசிம் ஜாபர் விமர்சனம்

0
42
Virat

இந்திய அணி நிர்வாகம் நியூசிலாந்து தொடர் தோல்விக்கு பிறகு இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என வாசிம் ஜாஃபர் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று இந்திய அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 124 ரன்கள் என்பதுதான் பிரச்சனையாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகம் செய்யும் தவறு

தற்போது வெஸ்ட் இண்டீஸ் இந்தியா வந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரில் இரண்டு போட்டிகளுக்குமே பேட்டிங் செய்வதற்கு பெரிய அளவில் கடினம் இல்லாத ஆடுகளம் கொடுக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இப்படியான ஆடுகளங்கள்தான் கொடுக்கப்பட வேண்டும்.

எனவே இந்திய அணி நிர்வாகம் நியூசிலாந்துக்கு எதிராக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை போட்டு அடி வாங்கியதில் இருந்து திருந்தி விட்டது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பெரிய அணியான தென் ஆப்பிரிக்கா வந்ததும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தார்கள். மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது போலவே தோல்வியும் வந்திருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி இடம் கற்றுக்கொள்ள வேண்டும்

விராட் கோலி இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்க அவர் விரும்பவில்லை. மாறாக சுழல் பந்துவீச்சு, வேகப் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என எல்லாவற்றுக்கும் சாதகம் இருக்கும்படியான அருமையான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டது. திறமை இருந்தால் ரன் அடிக்கலாம் விக்கெட் எடுக்கலாம் என்ற நிலைமையை உருவாக்கினார்.

இதையும் படிங்க : கம்பீர் பேசுவது அபத்தமானது.. இதெல்லாம் ஒரு ஆடுகளமா? நானே விக்கெட் எடுப்பேன்பா – ஸ்ரீகாந்த் விமர்சனம்

இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும் பொழுது ” நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமாக நாம் தோல்வி அடைந்ததற்கு பிறகும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இப்படியே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்களை அமைக்கும் பொழுது, நம்முடைய சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் அவர்களுடைய சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் இடையே திறமை ரீதியான இடைவெளி குறைந்து விடுகிறது. 2016-17 விராட் கோலி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இந்தியா வந்தபோது கிளாசிக் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டன. அப்படியான ஒரு நிலைமைக்கு கம்பீர் மீண்டும் திரும்ப வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -