நேற்று விஜய் ஹசாரே டிராபியில் பெங்கால் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி வீரர் அமன் ராவ் 154 பந்துகளில் 200 ரன்கள் குவித்தார். இந்த வீரரின் திறமை எப்படியானது? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த வீரரை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்திய கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கண்டுபிடிப்பு
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நவீன கால கிரிக்கெட்டில் ஸ்கவுட்டிங் என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல்லாக மாறி இருக்கிறது. பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற திறமை கொண்ட இளம் வீரர்கள் யாரையும் விட்டுவிடக்கூடாது என ஒரு அணி நிர்வாகம் பல ஸ்கவுட்களை உருவாக்கி வீரர்களை தேடுகிறது”
“இந்த விஷயத்தில் நாம் மும்பை இந்தியன்ஸ் அணியை பேசிய பிறகு நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்தும் பேச வேண்டும். இந்த முறையும் அவர்கள் சிறந்த இளம் வீரர்களை வாங்கி இருக்கிறார்கள். அதில் குறிப்பிடும்படியாக நேற்று விஜய் ஹசாரே தொடரில் பெங்கால் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த அமன் ராவ் முக்கியமானவர்”
இந்த ஷாட் போதும்
“அமன் ராவ் இன்னிங்ஸில் என்னை கவர்ந்த விஷயம் என்னவென்றால் அவர் ஒரே வேகத்தில் விளையாடவில்லை. இன்றைய கால பேட்ஸ்மேன்களிடம் இந்த விஷயம் இல்லை. அவர் முதலில் சதத்தை 108 பந்துகளில் அடித்தார். பிறகுதான் அவர் தனது பேட்டிங் வேகத்தை அதிகரித்தார். இரண்டாவது நூறை வெறும் 46 பந்தில் எடுத்தார்”
இதையும் படிங்க : இந்தியா வந்து ஆட முடியாதா.. அப்போ இந்த தண்டனை உறுதி.. பங்களாதேஷ்க்கு ஐசிசி ஜெய் ஷா எச்சரிக்கை
“அவர் அதிரடியாக விளையாடும் பொழுது அவரது பவர் ஹிட்டிங் வெளிப்பட்டது. சில பிரம்மாண்டமான ஷாட்டுகள் வந்தது. அந்த நாளில் அவருடைய சிறந்த ஷாட் எதுவென்றால், முகமது ஷமி ஸ்லோ பந்தை வீசப் போகிறார் என்று முன்கூட்டியே கணித்து, எக்ஸ்ட்ரா கவர் திசையில் மென்மையாக நேர்த்தியாக அடித்த சிக்சர்தான். இங்கிருந்து அமன் ராவ் எவ்வாறு உருவாகி வளரப் போகிறார் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






