இந்தியா வந்து ஆட முடியாதா.. அப்போ இந்த தண்டனை உறுதி.. பங்களாதேஷ்க்கு ஐசிசி ஜெய் ஷா எச்சரிக்கை

0
233
Jay

அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியா வந்து விளையாடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதாக ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி குழு முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

தற்போது பங்களாதேஷில் உள்நாட்டில் நிலவரம் சரியாக இல்லை. சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பங்களாதேஷ் வீரர் முஸ்தஃபிஷர் ரஹமானை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆட வைக்க கூடாது என இந்தியாவில் எதிர்ப்புகள் எழுந்தது. அதன்படி அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

பங்களாதேஷ் எதிர்ப்பு

இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை பங்களாதேஷில் ஒளிபரப்ப முடியாது என அறிவித்துவிட்டது. மேலும் தாங்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வந்து விளையாட முடியாது என்றும் கூறியிருக்கிறது. தங்களுக்கு பொதுவான இடத்தில் வெளியில் விளையாட இடம் கேட்டு ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது.

பங்களாதேஷ் அணி நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளை சந்திக்கிறது. மேலும் மும்பையில் நேபாள் அணிக்கு எதிராக மோதுகிறது. முதல் சுற்றில் நான்கு போட்டிகளையும் இந்தியாவில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிரடி முடிவு

இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிப்பதற்கு ஐசிசி தலைவர் ஜெய்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்களாதேஷ் இந்தியா வந்து விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இதுகுறித்து சீக்கிரத்தில் அறிவிப்பு வரலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 6 போட்டி 605 ரன்.. எனக்கு இந்திய ODI டீம்ல இடம் கிடைக்காத காரணம் இதுதான்.. டிகே வாழ்க்கையை மாத்தினார்

ஒருவேளை பங்களாதேஷ் அணி இந்தியா வந்து விளையாடாவிட்டால் முதல் சுற்று நான்கு போட்டிகளிலும் மற்ற அணிகள் வென்றதாக புள்ளிகள் கொடுக்கப்பட்டு விடும். இது பங்களாதேஷ் அணி டி20 உலகக்கோப்பையில் கலந்து கொள்ளாததற்கு சமமாக அமையும். அவர்கள் முதல் சுற்று விளையாடாமலே வெளியேறி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -