“அடுத்த தோனி ரிங்கு சிங்.. ஆனா அடுத்த ரிங்கு சிங் இந்த பையன்தான்” – அஸ்வின் கருத்து

0
851
Rinku

இந்திய கிரிக்கெட்டில் தற்போது இளம் வீரர்களுக்கான காலம் நிலவுகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட்டில் மூத்த வீரர்கள் விடை பெறுவதற்கான நேரம் நெருங்கி இருக்கிறது.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ருத்ராஜ், சாய் சுதர்சன், திலக் வர்மா போன்ற திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் வாய்ப்பு பெற்று தங்களை நிரூபித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் அதிக அளவு கவனம் ஈர்த்த வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் இருவரும் இருக்கிறார்கள். முதலாமவர் துவக்க வீரராக தன்னை நிரூபிக்க, இரண்டாமவர் பினிஷராக எல்லோரையும் ஈர்த்து இருக்கிறார்.

இதில் ரிங்கு சிங் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் முன்பு ஒரு முறை கூறியிருக்கும் பொழுது, முன்கூட்டியே சொல்வது தவறாக இருக்கும் என்றாலும் கூட, ரிங்கு சிங் ஒரு இடது கை மகேந்திர சிங் தோனி என கூறியிருந்தால்.

ஆட்டம் எந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதோடு, அதற்கேற்ற முறையில் விளையாடும் திறமை இருப்பதோடு, எந்தவித பதட்டத்தையும் களத்தில் காட்டாமல், இயல்பாக இருந்து ஆட்டத்தை முடிப்பதில் சிறப்பானவராக இருக்கிறார்.

- Advertisement -

எனவே ரவிச்சந்திரன் அஸ்வின் ரிங்கு சிங்கை மகேந்திர சிங் தோனி உடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். தற்பொழுது மகேந்திர சிங் தோனி ரிங்கு சிங் உடன் ஒப்பிட்டு இன்னொரு வீரரை பற்றி பேசி இருக்கிறார்.

அந்த வீரர் தற்பொழுது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் உதய் சகரன். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் நெருக்கடியான நேரத்தில் அவர் காட்டிய நிதானம் ரவிச்சந்திரன் அஸ்வினை கவர்ந்து இருக்கிறது.

இதையும் படிங்க : “பும்ரா கிடையாது.. இந்த வீரர்தான் இங்கிலாந்துக்கு பெரிய பிரச்சனை” – மைக்கேல் வாகன் பேச்சு

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “உதய் சகரனின் திறமையை விட அவரது நிதானம் என்னை அதிகம் கவர்ந்தது. பேட்டிங் செய்யும்பொழுது அவருடைய நிதானம் ரிங்கு சிங்கை ஞாபகப்படுத்தியது. இப்படியானவற்றை பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர் தன்னுடைய நிதானமான நடவடிக்கையின் மூலமாக, மிக உறுதியளிக்க கூடியவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.