“பும்ரா கிடையாது.. இந்த வீரர்தான் இங்கிலாந்துக்கு பெரிய பிரச்சனை” – மைக்கேல் வாகன் பேச்சு

0
122
Vaughan

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டி குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் பிப்ரவரி மாதம் வருகின்ற 13ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரின் கடைசி மூன்று போட்டிகளுக்கு இன்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் காயத்தின் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறியிருக்கிறார். அதே சமயத்தில் காயம் குணமடைந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் திரும்பி இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் விராட் கோலி தன்னுடைய 13 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முழுதாக ஒரு டெஸ்ட் தொடரை தவற விடுகிறார். தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் விலகி இருந்த விராட் கோலி, மேற்கொண்டு எஞ்சி இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் காரணமான வெளியேற்றம், மற்றும் கேஎல்ராகுல் காயம் குணமடைந்து உள்ளே வருவதால், இந்திய பேட்டிங் யூனிட்டுக்கு வெளியில் இருந்து எந்த வீரர்களையும் உள்வாங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. வெல்ல வேண்டிய அந்தப் போட்டியில் இந்திய அணியின் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான பேட்டிங் செயல்பாட்டின் காரணமாக இந்திய அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் திரும்பி வந்த இந்திய அணிக்கு எந்த வீரரும் 35 ரன்கள் தாண்டாத பொழுது, தனி ஒரு வீரராக நிலைத்து நின்று விளையாடி இரட்டை சதம் அடித்து 209 ரன்கள் ஜெய்ஸ்வால் குவித்தார். இதற்கு அடுத்து ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா பந்து வீசுவதற்கான அடித்தளமே ஜெய்ஸ்வால் உருவாக்கியதுதான். பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் கில் சதம் அடித்தார்.

தற்பொழுது இந்திய அணியில் ஜெய்ஸ்வால், பும்ரா மற்றும் கில் மூவரும் நம்பிக்கை அளிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள். மேலும் ஆடுகளங்கள் பெரிய அளவில் சுழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால், இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் தொடரில் பின்னால் இருக்கிறார்கள்.

தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு யார் அச்சுறுத்தல் தரக்கூடிய வீரராக இருப்பார் என்று இங்கிலாந்தின் முன்னால் கேப்டன் மைக்கேல் வாகன் தனது கருத்தை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “2018.. கோலியும் நானும் சொன்ன அந்த வேலையை செய்ய பும்ரா மட்டுமே தயாரா இருந்தார்” – ரவி சாஸ்திரி பேட்டி

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஜெயஸ்வால்தான் இங்கிலாந்து அணிக்கு பெரிய பிரச்சனை என்று நான் கூறுவேன். அவர் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பான வீரராக இருக்கிறார். அவரை நான் மும்பையில் முதல் முறை சந்தித்த பொழுது, ஐபிஎல் தொடரில் சதம் அடித்தார். தற்பொழுது உலகின் சிறந்த அணியான இங்கிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.