“கோலி ரூட் ஸ்மித் கிடையாது.. சிஎஸ்கே பிளேயர்தான் என் பவுலிங் நல்லா விளையாடுவாரு” – அஸ்வின் பேச்சு

0
383
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைகிறது.

இதே டெஸ்ட் தொடரில் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் 500 ஆவது விக்கெட்டை கைப்பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்திருந்தார். முத்தையா முரளிதரன் அடுத்து அதி வேகமாக 500 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பு அவருக்கு கிடைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைகின்ற காரணத்தினால், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து மனம் திறந்து நிறைய விஷயங்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

இந்த இலக்கை தான் எட்டுவதற்கு தன் குடும்பத்தார் மிகவும் உதவியாக இருந்திருக்கிறார்கள் என்றும், இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து இப்பொழுது அதிகம் சிந்திப்பது கிடையாது எனவும் நிறைய விஷயங்கள் கூறியிருக்கிறார்.

இதில் தான் யாருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் பந்து வீச விரும்பியது? மேலும் தனது பந்துவீச்சில் சிறப்பாக விளையாடி கூடிய பேட்ஸ்மேன்களாக யார் இருந்தார்கள்? என்பது குறித்தும் சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும்பொழுது “ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு பந்து வீச நான் பெரிது விரும்பினேன். அவர்கள் கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்து வருகிறார்கள்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்பாக நான் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிய பொழுது, சுழற் பந்துவீச்சை சிறப்பாக விளையாடக்கூடியவர்களுக்கு எதிராக முழுவதுமாக பந்து வீசக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத் அவருக்கு எதிராக நான் அதிகம் பதிவு செய்தது கிடையாது. ஆனால் அவருக்கு நான் வலையில் பந்து வீசும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடுவார்.

இதையும் படிங்க : “நீங்க டிவி மேட்ச்ல பார்க்கிற எதுவுமே உண்மை கிடையாது.. நான் வேணும்னே செய்யல” – ரோகித் சர்மா பேட்டி

இதேபோல் டெல்லியைச் சேர்ந்த மிதுன் மன்காஸ் மற்றும் ரஜத் பாட்டியா இருவரும் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். இவர்கள் இருவரும் நான் சர்வதேச கிரிக்கெட்டில் சந்திக்க விரும்பாதவர்கள்” என்று கூறியிருக்கிறார்.