ஐபிஎல் மெகா ஏலத்தில் RTM முறைதான் அநியாயமானது.. இதுதான் காரணம் – அஸ்வின் விளக்கமான பதில்

0
296
Ashwin

ஐபிஎல் மெகா ஏலத்தில் முன்பு நடைமுறையில் இருந்த ஆர்டிஎம் முறை மிகவும் நியாயம் இல்லாத ஒன்று எனவும், அது வீரர்களுக்கு உண்மையான விலையை கொடுக்காது எனவும், எனவே அந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் இருக்கக் கூடாது எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

ஆர்டிஎம் முறை என்பது, உங்கள் அணியில் இருக்கும் ஒரு வீரரை நீங்கள் ஏலத்தில் விடலாம், அந்த வீரர் ஏலத்தில் வரும் பொழுது மற்ற இரண்டு அணிகள் அந்த வீரருக்கு ஏலம் கேட்கலாம், அவர்கள் எவ்வளவு ஏலத்தில் அந்த இடத்தில் கேட்டாலும், நீங்கள் ஏலத்தில் விட்ட வீரரை கடந்த முறை என்ன விலைக்கு வாங்கி இருந்திர்களோ அதே விலையில் அதே வீரரை திரும்பவும் வாங்கலாம்.

- Advertisement -

இதன் காரணமாக ஒரு வீரருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கிடைக்காமல் போகும். ஒரு அணியில் கடந்த முறை ஒரு வீரர் என்ன விலைக்கு வாங்கப்பட்டிருந்தாரோ, அதே விலைக்கு மீண்டும் ஆர் டி எம் முறையில் அந்த வீரர் அந்த அணிக்கு விளையாட வேண்டி இருக்கும். மற்ற அணிகள் கூடுதலான விலைக்கு அந்த வீரரை வாங்க நினைத்தாலும் கூட, இந்த முறையால் அதைச் செய்ய முடியாது.

இதுகுறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ஆர்டிஎம் முறையை விட ஒரு வீரருக்கு அநியாயமானது எதுவும் கிடையாது. உதாரணத்திற்கு எக்ஸ் என்ற வீரர் இருக்கிறார் என்றால்,அவர் சன் ரைசர்ஸ் அணியில் இருக்கிறார் என்றால், அவருடைய தற்போதைய மதிப்பு ஐந்து முதல் ஆறு கோடி இருக்கிறது. இவரை வெளியில் விட்டு மீண்டும் சன்ரைசர்ஸ் அணி வாங்க வேண்டுமென்றால் அவருடைய அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாயிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் அந்த வீரர் ஏலத்திற்கு வரும்பொழுது அவரை வாங்க கே கே ஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியிடுகின்றன. இறுதியாக அந்த வீரர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறு கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறார். இந்த இடத்தில் சன்ரைசர்ஸ் ஆர் டி எம் முறையின் மூலமாக அவரை ஆறு கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி இடம் இருந்து வாங்கிவிடும். இந்த இடத்தில் சந்தோசம் அடையக்கூடிய அணி சன்ரைசர்ஸ் மட்டுமே. ஆனால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மகிழ்ச்சி அடைய முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆண்டு.. 25 முறை.. ஸ்பின்னர்களிடம் சிக்கும் விராட்.. எந்த இடத்தில் தவறு நடக்கிறது? – முழு அலசல்

கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி ஒரு அணி ஆறு கோடி ரூபாய்க்கு அந்த வீரரை வாங்கியதும், சன்ரைசர்ஸ் அணி உள்ளே வந்து சரி ஓகே இருக்கட்டும், அந்த வீரரை அப்படியே எனக்கு கொடுங்கள் என்று வெண்ணிலாக்கபடி குழு படத்தில் சூரி சொல்வது போல வாங்கிக் கொண்டு சென்று விடும்.அதே சமயத்தில் அந்த வீரருக்கான உண்மையான விலையும் கிடைக்காது. எனவே இந்த ஆர்டிஎம் முறை இருக்கக் கூடாது” எனக் கூறியிருக்கிறார்.