தற்போதைய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்யக்கூடிய ஒரே பேட்ஸ்மேனாக இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு கோவிட் காலம் ஆரம்பித்ததில் இருந்து சுழல் பந்துவீச்சில் பெரிய தடுமாற்றம் இருந்து வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
விராட் கோலி 2019 ஆம் ஆண்டு சதம் அடித்து நிறுத்தி இறுதியாக 2022ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில்தான் அடுத்து சதம் அடித்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவருடைய பேட்டிங் பெரிய சரிவுக்கு உள்ளானது. அது சர்வதேச போட்டிகளில் ஆரம்பித்து அந்த வருட ஐபிஎல் தொடரில் மிக மோசமாக எதிரொலித்தது. அந்த ஒரே ஐபிஎல் தொடரில் மூன்று முறை அவர்தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து இருந்தார். மேலும் மிகக் குறைந்த ரன் சராசரி அந்த ஆண்டு அவருக்கு இருந்தது.
இங்கிருந்து விராட் கோலி தன்னுடைய பேட்டிங்கை மேம்படுத்துவதற்காக பல முயற்சிகளை செய்தார். விக்கெட்டை பாதுகாப்பதற்கு அதில் சில அணுகுமுறைகளை கடைப்பிடித்தார். இந்த இடத்தில் தான் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் கொஞ்சம் நிதானம் காட்ட, பாதுகாப்பாக விளையாட மாறினார்.
விராட் கோலியின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிரான இந்த பாதுகாப்பான அணுகுமுறை அவருக்கு பெரிய வீழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் லெக் ஸ்பின் மற்றும் இடது கை சுழல் பந்து வீச்சில் 25 முறை ஆட்டம் இழந்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 6 முறை, ஒருநாள் போட்டிகளில் 11 முறை, டி20 போட்டிகளில் 8 முறை இப்படியான சுழல் பந்துவீச்சாளர்களிடம் விழுந்திருக்கிறார்.குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மூன்று முறையும் இந்த சுழல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி இருக்கிறார்.
விராட் கோலி கோவிட் காலத்திற்கு முன்பாக கால்களை நன்றாக பயன்படுத்தி விளையாடுவார். ஆனால் பேட்டிங் சரிவு வந்த பிறகு சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அவர் கால்களை பயன்படுத்துவதை குறைத்து விட்டார். கிரீசில் இருந்து இறங்கி வருவது பெரிய அளவில் இல்லை. மேலும் கிரீஸ்சில் ஆழமாக உள்ளே சென்று நிற்கிறார். இதன் காரணமாக ஒரு ஸெல்லுக்குள் சிக்கிக் கொள்கிறார்.
இதையும் படிங்க: சிறந்த கேப்டன் தோனியா ரோகித் சர்மாவா?.. சர்துல் தாகூர் வேற லெவல் பதில்.. இப்படியும் சொல்லலாமா ரசிகர்கள் ஆச்சரியம்
அவரது தைரியமான அணுகுமுறை நின்ற காரணத்தினால் அவர் இப்படி கிரீசில் பதுங்கி சிக்கிக் கொள்வதால் விக்கெட்டை இழந்து விடுகிறார். மீண்டும் கால்களை பயன்படுத்தி தைரியமான முறையில் வெளியே வந்து விளையாடும் பொழுதும், தேவையான பந்துக்கு பின்னால் சென்று விளையாடும் பொழுதும் அவரால் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியும். இல்லையென்றால் இந்த பிரச்சனை அவருக்கு முடிவுக்கு வருவது கடினம்!