இன்று பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் முதல் தகுதி சுற்றும் போட்டியில் ஆர்சிபி அல்லது பஞ்சாப் எந்த அணி வெல்லும் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று முதல் தகுதி சுற்று போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் ஐயரின் டைமா இல்லனா…
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இந்த நேரத்தில் நாம் மயங்க் அகர்வால் பங்களிப்பு பற்றி பேச மறக்க கூடாது. அவருக்கு சிறந்த உள்நாட்டு சீசன் இருந்தது. அவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் என்னுடைய சேனலில் பேசினேன். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என சொன்னார்கள். அவர் சிறப்பான முறையில் தன்னை நிரூபித்து இருக்கிறார். இது ஸ்ரேயாஸ் ஐயருக்கான நேரமாக இல்லாவிட்டால், 18வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி முதல் இடத்தில் இருக்கும்”
“தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்க்கும் பொழுது யாரையும் வெல்லக்கூடிய அணியாக தெரிகிறார்கள். அந்த அணியில் இருந்து யான்சன் தற்போது நாடு திரும்புகிறார். இருந்தபோதிலும் அந்த அணி பார்ப்பதற்கு வலிமையாகவே தெரிகிறது”
இந்த அணியே வெல்லும்
“ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் எடுத்துக் கொண்டால் அவர்கள் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களிடம் எப்படி செல்கிறார்கள் என்பதை பொறுத்து எல்லாமே அமையும். அதே சமயத்தில் இதே அணியுடன் ஆர்சிபி வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தால் அது குறித்து நான் ஆச்சரியப்பட மாட்டேன். இந்த அணியால் வெல்ல முடியும்”
இதையும் படிங்க : ஆர்சிபி பத்தி இந்த வர்ணனையாளர்கள் தொடர்ந்து மோசமா பேசறாங்க.. இந்த சோம்பேறிகள் மேல கோபம் வருது – ஏபி டிவில்லியர்ஸ் விமர்சனம்
“ஆர்சிபி அணி முதல் தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்று எனது உள்ளுணர்வு சொல்கிறது. இருந்த போதிலும் ஸ்ரேயாஸ் ஐயரின் படையையும் நாம் பார்க்க வேண்டும். அவர்களும் பலமாகவே இருக்கிறார்கள். விராட் கோலி காயத்தால் இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக ஸ்ரேயாஸ் அய்யர் பயன்படுத்திக் கொண்டார். அதற்குப் பிறகு அவர் திரும்பி பார்க்கவே இல்லை. ஏலத்தில் ரிஷப் பண்ட் பக்கம் செல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயரை ரிக்கி பாண்டிங் வாங்கினார். தற்போது அதற்கான பலன் என்னவென்று புள்ளி பட்டியலில் தெரிகிறது” என்று கூறி இருக்கிறார்.






