ஆர்சிபி பத்தி இந்த வர்ணனையாளர்கள் தொடர்ந்து மோசமா பேசறாங்க.. இந்த சோம்பேறிகள் மேல கோபம் வருது – ஏபி டிவில்லியர்ஸ் விமர்சனம்

0
409
Abd

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டி என்பது ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேசிய விதம் மிகவும் கோபப்படுத்தக் கூடியதாகவும் தவறாகவும் இருந்ததாக ஏபி டிவிலியர்ஸ் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த குறிப்பிட்ட போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடி சதம் அடிக்க லக்னோ அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 228 ரன்கள் குவித்தது. இதன்பிறகு ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆர் சி பி அணிக்கு ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து வெற்றி பெற வைத்து அசத்தினார்.

- Advertisement -

கேட்கவே எனக்கு கோபமாக இருந்தது

“நேற்று முன்தினம் இரவு நான் இந்த போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளர்களின் பேச்சை கேட்டேன். அது என்னை முற்றிலும் கோபப்படுத்துவதாக இருந்தது. நாங்கள் பந்து வீசிக் கொண்டிருந்த பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மிகவும் நெகட்டிவாக பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆர்சிபி அணியால் இதை நிர்வகிக்க முடியவில்லை, மீண்டும் அவர்கள் மோசமான நிலைக்கு சென்று விட்டார்கள் என்று தொடர்ந்து கூறி வந்தார்கள்”

“உண்மையில் இது பற்றி என்னவாக இருக்க முடியும்? இது ஒரு பேட்டிங் விக்கெட்டாக இருந்திருக்கக் கூடாதா?புத்தி கூர்மையான எனது கிரிக்கெட் வர்ணனையாளர் நண்பர்களே, இது பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம் என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி இல்லாமல் போனது?”

- Advertisement -

சோம்பேறித்தனமான பேச்சு

“ஆர்சிபி அணியின் பந்துவீச்சு மிக மோசமாக இருக்கிறது என அவர்கள் போட்டி முழுவதும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். இந்த போட்டியை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒரு கதையை மட்டுமே யோசித்து கொண்டு இருப்பதாக எனக்கு தெரிந்தது. அவர்களுக்கு இதுவரையில் ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது மட்டுமே நினைவில் இருந்து பேசுகிறார்கள்”

இதையும் படிங்க : பஞ்சாப்ல இருந்தே எங்கள நிறைய பேர் சப்போர்ட் பண்ண மாட்டாங்க.. ப்ளீஸ் இந்த முறை பண்ணுங்க – அர்ஷ்தீப் சிங் பேச்சு

” இதோ மீண்டும் தொடங்குகிறார்கள் பந்துவீச்சாளர்கள் பயனற்றவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சிந்திக்கவே இல்லை. இப்படி இவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது சோம்பேறித்தனம். பேட்டிங் செய்ய கடினமான ஒரு ஆடுகளத்தில் ரிஷப் பண்ட் 60 பந்துகளில் 118 ரன்கள் எடுக்கப் போவது கிடையாது. ஆனால் இதை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -