“இனி தென் ஆப்பிரிக்கா விளையாட கூப்பிட்டா போகாதிங்க” – பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி அதிரடி!

0
725
Ravi

இந்தியா இதுவரையில் 31 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

பொதுவாக கிரிக்கெட் உலகில் மூன்று வடிவத்திலும் திறமையான அணிகளை கொண்டிருக்க கூடிய நாடுகளாக அதிகபட்சம் ஆறு நாடுகள்தான் இருக்கின்றன.

- Advertisement -

எனவே இந்த ஆறு நாடுகள் விளையாடும் போட்டிகளுக்குதான் ரசிகர்களிடமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய வரவேற்பு இல்லாத காலக்கட்டத்தில், இந்த நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகள் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் பெரிய வருமானத்தை கொடுப்பதில்லை.

இப்படியான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுடன் இந்த முறை சொந்த நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடியது. இதற்கு முன்பாக வழக்கமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா இந்திய அணியுடன் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எனும் பொழுது முதல் போட்டியில் முடிவு தெரிந்து விட்டால், முதல் போட்டியில் தோற்கும் அணியால் தொடரை வெல்ல முடியாது என்கின்ற நிலை உருவாகிவிடுகிறது. இதனால் தொடர் அந்த இடத்திலேயே சுவாரசியம் இழந்து விடுகிறது.

- Advertisement -

மேலும் பெரிய கிரிக்கெட் நாடுகள் தங்களுக்குள் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் எண்ணிக்கையை குறைப்பது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிப்பதற்கு சமம் ஆகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் அணிந்தால் கிரிக்கெட் அதன் முழு வடிவத்தை இழந்து விடும்.

இப்படியான சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக குறைத்தது பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. மேலும் தங்கள் நாட்டின் டி20 லீக்கை விளையாடுவதற்காக, அனுபவமற்ற இளம் வீரர்களை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட நியூசிலாந்து அனுப்புவதும் விமர்சனம் ஆகி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ரவி சாஸ்திரி கூறும் பொழுது “இந்த டெஸ்ட் தொடரை பார்த்த பிறகாவது இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்களை எந்த நாடாவது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அழைத்தால் வரமாட்டோம் என்று கூறுங்கள்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நேரத்தை தேவையில்லாமல் வீணடிக்கிறது. இது அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கிறது. ஒன்று டி-20 மற்றும் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். இப்படி செய்திருந்தால் அவர்கள் மூன்று டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடியிருக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!