உலக கோப்பை பைனலில் ஆடும் 2 அணிகள்.. கணித்த ரவி சாஸ்திரி.. ரிக்கி பாண்டிங் கொடுத்த பதில்

0
3688

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 2023 ஆம் வருட உலகக் கோப்பையின் முதல் அரை இறுதி போட்டி மும்பையில் இன்று நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது.

முன்னதாக உலகக்கோப்பில் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இறுதிப் போட்டியில் ஆடும் இரண்டு அணிகளை பற்றிய கருத்துக்கணிப்புகளும் தொடர்ந்து வெளி வந்து கொண்டே இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் தொடர்ச்சியாக உலக கோப்பைகளை ஆஸ்திரேலியா அணிக்காக இரண்டு முறை வென்ற வருமான ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரும் மும்பையில் நடைபெற்ற குவிஸ் டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இவர்கள் இருவரிடமும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடப் போகும் இது என்று கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது. தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கும் ரவி சாஸ்திரி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் விளையாடும் என தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” அக்டோபர் 8-ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா உடன் விளையாடியது. அப்போது இது இறுதிப் போட்டிக்கான ஒத்திகை என நான் தெரிவித்தேன். இப்போதும் அதே கருத்தையே தெரிவிக்கிறேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் போட்டியில் விளையாட இருக்கும் இரு அணிகள்” என தனது கருத்தை உறுதியாக பதிவு செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணியின் லெஜெண்டரி வீரர் ரிக்கி பாண்டிங் ” கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்” என வைத்துள்ளார். இந்த கருத்து குறித்து மேலும் பேசிய அவர்” இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரண்டாவது பேட்டிங்கின் போது ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு அதிக ரன் எடுக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்” என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடும் இரண்டு வீரர்களை தேர்வு செய்யுங்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்தார். ரவி சாஸ்திரி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தேர்வு செய்தார்.

இந்திய அணி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் தங்களுக்கு இருக்கும் தடைகளை இன்று உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா 2014 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் அரை இறுதியில் தோல்வி பிறகு 2016 டி20 உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் தோல்வி மற்றும் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளின் அரை இறுதியில் மீண்டும் ஒரு தோல்வி 2022 டி20 உலக கோப்பையின் அரை இறுதியில் தோல்வி என நாக் அவுட் போட்டியில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தற்போது இருக்கும் இந்தியா அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.