தோனியின் இடத்தை நிரப்ப ரிஷப் பண்ட் ‍சரியானவர் கிடையாது ; ரவி சாஸ்திரி தேர்ந்தெடுத்துள்ள வீரர் இவர்தான்

0
348
Ravi Shastri Rishabh Pant and MS Dhoni

கடந்த 2021ஆம் ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்று முதல் சுற்றோடு வெளியேறியது, அதிர்ச்சியை மட்டுமல்லாமல், இந்திய வீரர்களின் டி20 செயல்திறன் எப்படி இருக்கிறதென்று வெளிச்சம் போட்டு காட்டுவதாய் இருந்தது!

இதனால் இந்திய டி20 அணிக்கு ஒரு புத்துயிர் கொடுப்பதற்காக புதுமாற்றங்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டும், தேர்வாளர்களும் தயாராகவே இருப்பது, செளத் ஆப்பிரிக்கா அணியுடன் ஐந்து இருபது ஓவர் போட்டி தொடரில் மோதவிருக்கும் இந்திய அணியை அறிவித்ததிலேயே தெரிகிறது.

- Advertisement -

ஏனென்றால் அணியில் புதுமுக வீரர்களாக இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றதோடு, மூன்று ஆண்டுகள் கழித்து இந்திய டி20 அணியில் 37 வயதான தினேஷ் கார்த்திற்கும் இடம் கிடைத்துள்ளது. நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் பேட்டிங்கில் பினிசராய் அவரது செயல்பாடு நம்ப முடியாத வகையில் இருந்தது. மொத்தம் 16 போட்டிகளில் ஆடிய அவர் 330 ரன்களை, 183.33 என்ற பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் நடக்கவிருக்கும் இருபது உலகக்கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பினிசர் இடங்கள் குறித்து, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் இரவி சாஸ்திரி தனது கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் “தினேஷ் கார்த்திற்கு இது நல்ல வாய்ப்புதான். அவருக்கு அனுபவம் இருக்கிறதென்று நமக்குத் தெரியும். அதை அவர் சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இப்பொழுது இந்திய அணி மேலே பேட் செய்யும் விக்கெட் கீப்பர் வேண்டுமா இல்லை பினிசிங்கில் பேட் செய்யும் விக்கெட் கீப்பர் வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். என்னிடம் கேட்டால் நான் பினிசிங் ரோல் செய்யும் தினேஷ் கார்த்திக்கிடம்தான் போவேன். தோனிக்குப் பிறகு அங்கு யாருமே சரியாக கடைசி நேரத்தில் ரன் திரட்ட இல்லை” என்று குறிப்பிட்டார்!

- Advertisement -