விராட் கோலி எவ்வளவு பயிற்சி செய்தாலும்.. இது இல்லாம சிறப்பா விளையாட முடியாது – ரவி சாஸ்திரி பேட்டி

0
1568
Virat

17 வது ஐபிஎல் 2024 சீசன் முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூர் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த போதிலும், நட்சத்திர பேட்டிங் வரிசையைக் கொண்ட பெங்களூர் அணியால் ஆடுகளத்திற்கு தகுந்தாற் போல ரன்களை குவிக்க முடியவில்லை.

15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்திருந்ததே அணியின் தோல்விக்கு காரணம் என்று கேப்டன் பாப் டு ப்ளஸ்சிஸ் கூறியிருக்கிறார். கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் தவிர விராட் கோலி, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய கோலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பிய போதும், அவரால் போதுமான ரன்களைக் குவிக்க முடியவில்லை.

- Advertisement -

எப்போதுமே பவர் பிளேவில் அதிக பந்துகளை எடுத்துக் கொண்டு ரன் விகிதத்தை அதிகரிக்கும் விராட் கோலிக்கு இந்த முறை முதல் ஆறு ஓவர்களில் ஆறு பந்துகள் மட்டுமே கிடைத்தன. சிறிது இடைவெளிக்கு பிறகு களத்திற்கு திரும்பியதால் சென்னை அணியின் ஃபீல்டிங் செட்டப்பும் விராட் கோலிக்கு சற்று கடினமாக இருப்பது போல் தோன்றியது.

பவர் பிளே வரை அமைதி காத்த அவர், அதன் பிறகு ரன் ரேட்டை உயர்த்த நினைத்த நிலையில், மிக வேகமாக மூன்று விக்கெட்டுகளை இழந்தார். டு பிளஸ்சிஸ், மாக்ஸ்வெல், பட்டிதார் என்று முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்ததால் அவருக்கான சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. மேலும் விராட் கோலி முஸ்தபிசுர் ரஹமானின் 12வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்க, அதை ரகானே அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.

விராட் கோலிக்கு என்ன தேவை?

எனவே இந்த முதல் போட்டி கோலிக்கு நினைத்தபடி அமையவில்லை. எனினும் வர்ணனையாளரான ஸ்மித் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பதாகவும், அவர் ஆரம்பத்திலேயே நல்ல ஷாட்களை விளையாட முயற்சி செய்ததாகவும் கூறி இருக்கிறார். அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட ரவி சாஸ்திரி விளையாட்டில் இருந்து நீண்ட நேரம் விலகி இருந்தால் இவ்வாறு நடக்கும் என்று கூறியிருக்கிறார். இது குறித்த அவர் மேலும் கூறுகையில்

- Advertisement -

“சிறிய இடைவெளிக்குப் பிறகு நெட்ஸில் நீங்கள் எவ்வளவு நேரம் பேட்டிங் பயிற்சி செய்தாலும்,அவ்வளவு நேரம் நீங்கள் விளையாட்டில் இருந்து வெளியேறினால் உங்களது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்க சிறிது நேரம் தேவைப்படும்.உங்களுக்கு கொஞ்சம் போட்டி நேரம் தேவை. விராட் கோலியின் நிலைமை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ரன் வேகத்தை அதிகரிக்க நினைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டம் இழந்தார். இருப்பினும் களத்தில் பேட்டிங் செய்ய எடுத்துக் கொண்ட நேரம் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு நிச்சயம் மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஆர்சிபிக்கு எதிராக கேப்டன்சியில் ருதுராஜ் செய்த 4 மாஸ் சம்பவங்கள்.. சிஎஸ்கே-க்கு கேப்டன் கிடைச்சாச்சு

ஐபிஎல் தொடருக்கு அடுத்து வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவதை தேர்வுக்குழு விரும்பவில்லை என்பதாக ஒரு செய்தி சமீபத்தில் பரப்பப்பட்டது. எனவே நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டிய ஒரு அழுத்தம் வெளியில் இருந்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் சிறப்பாக மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.