ஆர்சிபிக்கு எதிராக கேப்டன்சியில் ருதுராஜ் செய்த 4 மாஸ் சம்பவங்கள்.. சிஎஸ்கே-க்கு கேப்டன் கிடைச்சாச்சு

0
786
Ruturaj

நடப்பு ஐபிஎல் 17வது சீசன் துவங்குவதற்கு முன்பாக மகேந்திர சிங் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் டபுள் ரோல் செய்ய விருப்பதாக சூசகமாக குறிப்பிட்டிருந்தார். அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று 17வது ஐபிஎல் சீசன் துவங்குவதற்கு முதல் நாள் மகேந்திர சிங் தோனி கேப்டன் குரூப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும், அவருடைய இடத்திற்கு 27 வயதான இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தகவலை வெளியிட்டது.

- Advertisement -

மேலும் இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும், கடந்த வருடமே மகேந்திர சிங் தோனி தன்னிடம் எதற்கும் தயாராக இருக்கும்படி கூறினார் என்றும், இந்த முறை பயிற்சி முகாமுக்கு வந்ததும் ஒரு வாரத்துக்கு முன்பாக, கேப்டன் பொறுப்பை கொடுக்க இருப்பதாக கூறிவிட்டார் என்றும் ருதுராஜ் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு புதிய கேப்டன் ருதுராஜ் டாஸ் நிகழ்வுக்கு முதன்முறையாக வந்து, அங்கிருந்து தொடர்ந்து சிஎஸ்கே அணியை கேப்டனாக களத்தில் வழி நடத்தினார். அவருக்கு உதவி செய்வதற்கு பக்கபலமாக அனுபவ வீரர்கள் மகேந்திர சிங் தோனி ரகானே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருந்தார்கள்.

கேப்டன்ஷியில் ருதுராஜ் செய்த சிறப்பான சம்பவம்

நேற்றைய போட்டியில் பவர் பிளேவில் ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதன் காரணமாக தீபக் சகர் மற்றும் துஷார் தேஸ்பாண்டே ஓவர்களில் ரன்கள் நிறைய கசிய ஆரம்பித்தது. இந்த நிலையில் உடனே சுதாரித்து நான்காவது ஓவருக்கு மூன்றாவது பந்துவீச்சாளராக மதிஷா தீக்சனாவை கொண்டு வந்தார். அந்த இடத்தில் பாப் டு பிளிசிஸ் பேட்டிங் வேகம் தடுக்கப்பட்டது.

- Advertisement -

உடனே ஐந்தாவது ஓவருக்கு நான்காவது பந்துவீச்சாளராக பங்களாதேஷின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபீஸூர் ரகமானை கொண்டு வந்தார். ருதுராஜின் இந்த முடிவு நேற்றைய போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர் கேப்டன் பாப் மற்றும் ரஜப் பட்டிதார் விக்கெட்டை ஒரே ஓவரில் கைப்பற்றினார்.

சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் ஆறாவது ஓவரில் செய்த விஷயம்தான் அவர் கேப்டன் பொறுப்புக்கு சரிப்பட்டு வருவார் என்பதை காட்டியது. அந்த ஓவருக்கு மதிஷா தீக்சனாவை தொடராமல், தங்களுடைய பவர் பிளே பந்துவீச்சாளர் தீபக் சகரை அவருடைய மூன்றாவது ஓவருக்கு கொண்டு வந்தார். ஏனென்றால் அவரைப் பின்பகுதியில் பயன்படுத்த முடியாது. இதற்கு கை மேல் பலனாக மேக்ஸ்வெல் விக்கெட் கிடைத்தது. இந்த இடத்திலேயே ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே கையில் ஆட்டம் வந்து விட்டது எனக் கூறலாம். இதையேதான் ருதுராஜும் பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : கொஞ்சம் கேப்டன் ருதுராஜையும் காட்டுங்க.. வீரேந்தர் சேவாக் ஓப்பன் டாக்.. தோனி ரசிகர்கள் கோபம்

அவர் செய்த இந்த மூன்று பவுலிங் மாற்றங்கள் மற்றும் நான்காவதாக சமீர் ரிஸ்வியை அணியில் சேர்த்தது என எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் பொழுது, சிஎஸ்கே அணிக்கு நீண்ட கால கேப்டனாக ருதுராஜ் இருக்கப் போகிறார் என்பது உறுதியாகிறது. எதிரணியின் ரன் வேகத்தை தடுத்து, கிடைக்கும் கேப்பில் விக்கெட்டை கைப்பற்றும் மகேந்திர சிங் தோனியின் பாணி ருதுராஜிடமும் இருக்கிறது என்பது சிறப்பு!