அஷ்வினுக்காக ஜெய் ஷா செய்த காரியம்.. உண்மையை உடைத்து சொல்லிய ரவி சாஸ்திரி

0
231
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வித்தியாசமான முறையில் சுவாரசியமான கட்டங்களை தாண்டி வருகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பின்போது, உலகக் கோப்பைத் தொடரில் பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்த விராட் கோலி எவ்வளவு ரன்கள் குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அவர் இந்த தொடர் முழுக்கவே விளையாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் முதல் டெஸ்டில் விளையாடி இரண்டாவது டெஸ்ட் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் வரவில்லை. கேஎல்.ராகுல் மூன்றாவது டெஸ்டிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி போட்டிகளுக்கு முன்பாக வீரர்கள் விலகிக் கொண்டிருப்பது தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. கேப்டனாக அனுபவ வீரர்களின் விலகல் ரோகித் சர்மாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஆனால் இதைவிட பெரிய பின்னடைவாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மத்தியில் இருந்து அஸ்வின் விலகியது அமைந்தது. அந்த நேரத்தில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 207 ரன்கள் குவித்து வலிமையான நிலையில் இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில்தான் குடும்ப அவசர மருத்துவ சூழ்நிலை காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்ததை இந்திய அணி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் முழுமையாக ஆதரித்தது.

இத்தோடு இல்லாமல் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனடியாக சென்னை செல்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தனி விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். மேலும் அவர் போட்டியில் திரும்ப வந்து விளையாடவும் தனி விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்கள் இல்லையென்றால் கிரிக்கெட் வாரியம் கிடையாது. வீரர்களின் இந்த மாதிரியான முக்கிய விஷயங்களில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சிறந்த முறையில் நடந்து கொண்டு வருகிறது. விராட் கோலிக்கும் இந்த வகையிலேயே மதிப்பளித்து நடந்து கொண்டது. மேலும் மற்றவர்களும் வீரர்களின் முடிவுகளை மதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

இதையும் படிங்க : “3 மோசமான அம்பயர் முடிவு.. இந்த ரூல்சையே தூக்கிடுங்க” – பென் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு

இந்த உண்மையை தற்பொழுது ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா நடந்து கொண்ட விதம் பலரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.